வெட்டுக்களிக்குளம் புனரமைப்பு
நியாப் திட்டத்தின் கீழ் 46 லட்சம் ரூபா செலவில் நெடுந்தீவு மத்தி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வெட்டுக்களிக்குளம் புனரமைக்கப்பட்டு வருகிறது.
மக்கள் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள குளப்புனரமைப்பு வேலைகளை நியாப் திட்ட பொறியியலாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். குளப்புனரமைப்புக்குத் தேவையான ஆளணியினர் இருக்கின்ற போதிலும் வேண்டிய வாகன, உபகரண வசதிகள் குறைவாகவே காணப் படுகின்றன. இதனால் காலநிலையின் சீரற்ற தன்மையினால் காலதாமதமாக ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் மேலும் கால தாமதமாகலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.