புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, September 17, 2003

வவுனியா வடக்கு கோரமோட்டை அ. த. க பாடசாலை புனரமைப்பை நிறுத்த உத்தரவு.
யாழிலிருந்து தயா. பகவன் - செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2003, 20:45 ஈழம்

சிறிலங்கா இராணுவத்தின் படை நடவடிக்கையால் சேதமடைந்த வவுனியா வடக்கு கோரமோட்டை அ. த. க பாடசாலையை மீள இயங்கச் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

அக்கிராம மக்கள் மேற்கொண்ட கடும் முயற்சியினால் அப்பாடசாலையை மீளமைக்க கல்வி அமைச்சு நிதியுதவி அளிக்க இணக்கம் தெரிவித்தது. இதனை அடுத்து மக்கள்; புனரமைப்புப் பணியை ஆரம்பித்து மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் வவுனியா வடக்கு கல்விப் பணிப்பாளர் அப்பணிகளை நிறுததுமாறு உத்தரவிட்டுள்ளார். கோரமோட்டையில் மக்கள் கூடியளவு மீளக் குடியமரவில்லை என்று அதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாடசாலை இயங்காத காரணத்தினால் தான் தாம் மீளக் குடியமர முடியாதுள்ளதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இத்தடை குறி;த்து விசனம் தெரிவிக்கின்றனர். முக்கள் மீளக் குடியமர்ந்து வரும் பகுதிகளில் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் சமூக நிறுவனங்கள் நிரந்தரமாக இயங்க வேண்தும் எனப் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

nantri - Puthinam.com
இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை விளக்கி ஐ.நா.வுக்கு ஒரு இலட்சம் கையெழுத்துக்கள்
யாழிலிருந்து தயா. பகவன் - செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2003, 20:39 ஈழம்

யாழ். குடாநாட்டில் இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை விளக்கி ஒரு இலட்சம் கையெழுத்துடனான மகஜரை ஐ.நா. செயலாளருக்கு அனுப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற வலி. வடக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மண்டபத்தில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் ஐ.நா. சபையில் எதிர்வரும் 26ம் திகதி பிரதமர் ரணல் விக்கிரமசிங்க உரையாற்றுவதற்கு முன்பாக ஒரு இலட்சம் கையெழுத்துடனான மகஜரை அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும் வேறு இடங்களிலும் தங்கியுள்ள மக்கள் மீள்க் குடியமர்வதற்கான நடவடிக்கைகளை அரசு புறக்கணிப்பதனையும் அனுமதிக்கப்பட்ட பகுதிகளை படையினர் மீண்டும் ஆக்கிரமிப்பதையும் சுட்டிக் காட்டி அம்மகஜர் அனுப்பப்படும். இதற்கான கையெழுத்துக்கள் பெறும் நடவடிக்கை புதன்கிழமை ஆரம்பமாகிறது.

இதேவேளை இடம்பெயர்ந்த மக்கள் தமது இடங்களில் குடியமர சிறிலங்கா அரசு உடனடி நடவடிக்ககை எடுக்காவிடில் எமது சொந்த அடங்களில் நாம் அத்துமீறிக் குடியமர்வோம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களின் சமாசத் தலைவர் கே. கணேஷ் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு கல்லோயா, திருகோணமலை மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் சிங்கள மக்களை மீளக் குடியமர்த்தும் சிறிலங்கா அரசு எமது பகுதிகளில் எம்மைத் தடுத்து வருகின்றது என அவர் மேலும் விசனம் தெரிவித்தார்.

nantri - Puthinam.com
மக்கள் மீளக் குடியேறிய குப்பிளானில் மிதிவெடி அபாயம். ஜ யாழிலிருந்து தயா. பகவன் - செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2003, 20:23 ஈழம்

மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்ட குப்பிளான் பகுதியில் இன்னும் மிதிவெடி அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்களால் அதிகளவில் பாவிக்கப்படும் நான்கு இடங்களில் கூடுதலாக மிதிவெடிகள் இருப்பதாக குப்பிளான் கிராம அலுவலர் எச்சரித்துள்ளார்.

பலாலி படைத்தள முன்னரங்க நிலைகளுக்கு அண்மையில் உள்ள குப்பிளான் பகுதி 1995ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் போது படையினரின் பாதுகாப்பு அரண்கள் கூடியளவு அமைக்கப்பட்ட பிரதேசமாக மாறியது. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்கள் வாழ அனுமதிக்கப்பட்ட குப்பிளானின் ஒரு பகுதியில், படையினரின் மண்ணரண் ஊடறுத்துச் செல்கின்றது.

தற்போது மக்கள் கூடுதலாக மீளக் குடியமர்ந்து வாழும் இக்கிராமத்தில் மிதிவெடி அபாயம் இன்னும் நீங்கவில்லை என அப்பகுதி கிராம சேவகர் பரமநாதன் எச்சரிக்கின்றார். குப்பிளான் பிரதேசத்தின் எல்லைகளில் அமைந்துள்ள மி;ன்திரை, பூதரான்கலட்டி, தயிலங்கடவை ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ மண்ணரண்களை அண்டியும் ஞான வைரவர் கோயிலடியில் அமைந்துள்ள தனியார் காணியொன்றிலும் அதிகளவில் மிதிவெடிகள் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

மிதிவெடிகள் காணப்படும் பிரதேசங்களை அண்டி விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளை அண்டிய வீதிகள் ஊடாகவே மாணவர்களும் பாடசாலைகளுக்கும் சென்று வருகின்றனர். இவ் அச்சுறுத்தல் குறித்து சிறிலங்கா படையினருக்கு தான் அறிவித்த போதிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வந்து பார்வையிட்டு வரை படங்களைப் பெற்றுச் சென்ற போதிலும் ஆக்க பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கிராம அலுவலர் தெரிவித்தார்.

nantri - Puthinam.com
De-mined Mannar village ready for resettlement
[TamilNet, September 15, 2003 19:00 GMT]

The Swiss Foundation for Mine Action (FSD) said Monday that the Mallavarayankattu Adampan village in the Mannar district had been cleared of mines and is fit for resettlement of the displaced persons, and it ceremoniallly handed over the village to the Mannar Government Agent, Mr.V. Visuvalingam, Monday evening at a function held at the Adampan Matha Church, district secretariat sources said.

Mallavarayankattu Adampan is the first mine-free village in the Mannar district, sources said. The FSD said an area of about 4,32,635 square meters was cleared.

Mannar Bishop, the Rt.Rev Rayappu Joseph, the Liberation Tigers' Mannar district political head, Mr.C.Amirthab,Sri Lanka Army and Police officials and representatives of various organizations attended the event, sources said.

All 97 Tamil families in the village fled in 1997 during the Sri Lanka Army's military operation code-named "Edibala" and sought refuge at the Jeevothayam centre in Murunkan, sources said.

The displaced families have been pressing the civil authorities for resettlement in the village since the signing of the ceasefire agreement between the Sri Lankan government and the LTTE in February last year, sources said.

The Mannar GA has taken steps to resettle the displaced in stages following the handing over of the village by the FSD, sources said.

Twenty-one families would be resettled in the village within the next two weeks in the first stage, district secretariat sources said.

Quelle - Tamilnet.com