புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, March 11, 2004

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு கிளிநொச்சியில் புதிய கட்டடம் கடந்த செவ்வாயன்று திறந்துவைக்கப்பட்டது



தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப்பணியகத்துக்கான புதியகட்டடம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.இக்கட்டடத் தொகுதியை கிளி நொச்சிக்குச் சென்றிருந்த பிரிட்டிஸ் தூதுவர் ஸ்ரீபன் இவன்ஸ் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைத்தார். தமிழர் புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.றெஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரிட்டிஸ் தூதரக அதிகாரிகள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், தமிழர் புனர்வாழ்வுக்கழகத் திட்டப் பணிப்பாளர் லோறன்ஸ் கிறிஸ்ரி, மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஜெயகுலராசா உட்பட பலர் கலந்துகொண்டனர். திறப்புவிழா நிகழ்வை அடுத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பிரதிநிதிகளுக்கும் பிரிட்டிஸ் தூதரக அதி காரிகளுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.






Quelle - Tamilnet
Photos - Tamilnet
- 10.03.04 -