புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, June 28, 2004

பருத்தித்துறை நகரில் புதிய நவீன சந்தை

பருத்தித்துறை நகரில் புதிய நவீன சந்தை
3 கோடி 70 லட்சம் செலவில் நிறுவப்படும்
நகர ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம்


கடந்தகால யுத்த நடவடிக்கைகளின் போது பாரிய அழிவுகளைச் சந்தித்த பருத்தித்துறை நகரை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தின் ஆரம்பகட்டமாகப் புதிய நவீன சந்தை ஒன்று 3 கோடி 70 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

பருத்தித்துறை நகரத்தைப் புனரமைத்து பழைய நிலைமைக்குக் கொண்டுவரும் நோக்கில் பருத்தித்துறை நகரசபையினால் நகர புனர்நிர்மாண ஆலோசனைச் சபை ஒன்று அண்மையில் நிறு வப்பட்டது.

நகர சபையின் செயலாளர் திருமதி கமலா திருச்செல்வ நாயகம் தலைமையில் நடைபெற்ற இந்தச் சபையின் கூட்டத்தில் முதற் கட்டமாக நவீன சந்தை ஒன்றை உருவாக்குவது என்ற தீர்;மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கூட்டத்தில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.கஜேந்திரன், கே.சிவநேசன் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைப் பணிப்பாளர் இராசநாயகம், விடுதலைப் புலிகளின் வடமராட்சி அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.தயா, உள்ளுராட்சித் திணைக்களத்தின் யாழ். பிராந்தியப் பொறுப்பாளர் எஸ்.சுப்பிரமணியம் உட்படப் பல் வேறு திணைக்களங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டோர் அனைவரும் முன்வைத்த கோரிக்கைகள் பலவும் ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்;மானங்கள் வரு மாறு:-
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் முயற்சியால் பருத்தித்துறை நகரில் அதி நவீன சந்தை ஒன்றைக் கட்டுவதற்கு ஷநிக்கொட்| நிறுவனம் 3 கோடி 70 லட் சம் ரூபாவைக் கட்டம் கட்டமாக வழங்கவுள்ளது. முதற்கட்டமாக வழங்கப்படும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவைக் கொண்டு வேலைகளை விரைவில் ஆரம்பிப்பதென்றும், ஏற்கனவே பழைய சந்தை இருந்த பஸ் நிலையப் பகுதியில் புதிய சந்தையை நிர் மாணிப்பது என்றும் தீர்;மானிக்கப்பட்டது.

மினி பஸ்கள், ஓட்டோக்கள் என்பன தற்போதைய திக்க முனை விளையாட்டு மைதானத்தில் தரித்து நின்று சேவை புரியலாம். பருத்தித்துறை பஸ் நிலையம் ஊடாக இவை வந்து செல்லலாம்.

மருதடியில் உள்ள வடபிராந்தியப் போக்குவரத்துச் சபை டிப்போ ஆனைவிழுந்தான் வெளிக்கு மாற்றப்படவிருப்பதால், தற்போது டிப்போ உள்ள இடத்தை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.

பருத்தித்துறைத் துறைமுகத்துக்குப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லொறிகளைப் பிரதான வீதி ஊடாகச் செல்ல இனி மேல் அனுமதிக்காமல், போக்குவரத்து நெருக்கடிகளைத் தவிர்க்கும் முகமாகத் துறைமுகத்துக்குச் சென்று வரும் லொறிகள் அனைத்தும் மந்திகை, உபயகதிர்காமம், வராத்துப்பளை, தும்பளை, மணியகாரன் சந்தி, கடற்கரை வீதி ஊடாகச் சென்றுவர அனுமதி வழங்கப்படும்.

nantri-Uthayan