புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, September 01, 2003

-சிறப்புற நடந்தேறிய- கிளிநொச்சி ஊனமுற்றோர் புனர் வாழ்வுச் சங்க விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள்
வன்னியிலிருந்து கிருபா - ஞாயிற்றுக்கிழமை, 31 செப்ரெம்பர் 2003, 18:16 ஈழம்

கிளிநொச்சி மாவட்ட ஊனமுற்றோர் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட சங்க அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் ப் பிற்பகல் 1. 30 மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகாமையிலுள்ள கிளிநொச்சி மாவட்ட ஊனமுற்றோர் சங்க வாயிலிருந்து பிரதம விருந்தினர் சிறப்பு விருந்தினர்கள் மங்கல வாத்திய இசையுடன் கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மங்கல விளக்கினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிளிநொச்சி அரச அதிபர் திரு தி. இராசநாயகம் சிறப்பு விருந்தினர்கள் கரைச்சி பிரதேச செயலர், பொன். நித்தியானந்தன், போரூட் நிறுவன வெளிக்கள உத்தியோகத்தர் திரு கா. சாந்தலிங்கம், கியூடெக் நிறுவன கிளிநொச்சி முல்லை மாவட்ட இணைப்பாளர் திரு. இ. கணேசபிள்ளை ஏற்றி வைக்க தமிழீழ தேசியக் கொடியினை வே. சாந்திமதி ஏற்றி வைத்தார் நிறுவனக் கொடியினை திரு. சிவமாறன் ஏற்றி வைத்தார்

கிளிநொச்சி முல்லை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு தேவசகாயம் அடிகளின் ஆசியுரையினைத் தொடர்ந்து ஊனமுற்ற அங்கத்தவர்களின் விளையாட்டு நிகழ்க்சி ஆரம்பமாகியது. நிகழ்வில் கண்டாவளைப் பிரதேச செயலர் திரு மத்தியாஸ், உளவளத்துறை கிளிநொச்சி முல்லை மாவட்ட இயக்குனர் அருட்திரு றெஜினோல்ட் அடிகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் திருமதி மலர் சின்னையா யாழ். ஊனமுற்றோர் சங்க நிர்வாக அலுவலர் திரு மா. தில்லைநாதன,; கருணா நிலைய இயக்குனர் அருட்திரு றோய்ஸ் அடிகள் ஊனமுற்றோர் சங்க இயக்குனர் அருட் சகோதரி லு}ட்ஸ் மற்றும் அதிகாரிகளும் கலந்த வெற்றியீட்டியோருக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர் நிறுவன திட்ட இணைப்பாளர் திரு. இ. அன்ரன் நன்றி உரை வழங்கினார்.

இதேவேளை நேற்று முன்தினம் ஊனமுற்றவர்களுக்கான மரதன் மற்றும் துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டிகள் நடைபெற்றது. காலை 6. 00 மணியளவில் முரசுமோட்டை 2 ஆம் கட்டை பாடசாலை முன்பாக ஆரம்பமான இப்போட்டி கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்க தலைமையகத்தின் முன்பாக நிறைவு பெற்றது இப்போடடிகளில் 09 பெண் போட்டியாளர்கள் உட்பட 37 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் 17 போடடியாளர்கள் மரதன் ஓட்டப் போட்டியிலும் 20 போட்டியாளர்கள் சைக்கிள் ஓட்டப் போட்டியிலும் கலந்து கொண்டனர்.

நன்றி: ஈழநாதம்