புனர்வாழ்வு

NEWS Rehablitation

Friday, October 31, 2003

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கண்காணிப்பில் 2721 முன்பள்ளிகள் இயங்குகின்றன.

தமிழர் தாயகத்தில் 2721 முன்பள்ளிகள் தமிழர் புனர்வாழ்வுக்கழக முன்பள்ளி கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆளுகையில் இயங்கி வருகிருன்றன.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் இம் முன்பள்ளிகளில் நான்காயிரத்து ஐநூற்று ஏழு ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதாகவும் எழுபத்து மூவாயிரத்து முந்நூற்று ஐம்பத்து நான்கு மாணவர்கள் இதனூடான கற்றலில் இணைந்திருப்பதாகவும் அப்புள்ளி விபரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து தேனூராள்.
31.10.03
nantri-Puthinam.com
வெற்றிமனை பெண்கள் உளவளத்துணை நிறுவன 12வது ஆண்டு விழா

சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை உள்வாங்கி 12 ஆண்டுகளாக (தற்போது) கிளிநொச்சி அக்கராயனில் இயங்கி வருகின்ற கிளிநொச்சி வெற்றிமனை பெண்கள் உளவளத்துணை நிறுவனத்தின் 12வது ஆண்டு விழா நாளை நடைபெறவுள்ளது.

பல்வேறு இடம்பெயர்வுகளுடன் இயங்கி வரும் வெற்றிமனை கிளிநொச்சியில் கட்டப்பட நோர்வே துணை வெளியுறவு துணை அமைச்சர் வீதார் ஹெல்கிசன் அடிக்கல் நாட்டிய போதும் அதனை கட்டுமாணம் செய்யும் தொடர்சிரானை சிறிலங்கா அரசு முடக்கியதால் கட்டுமான வேலைகள் தொடரவில்லை.

யாழிலிருந்து எழின்மதி
31.10.03