புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, May 26, 2004

இரணைமடுக்குள புனரமைப்புக்கு 100 கோடி ரூபா ஒதுக்கீடு

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரணைமடுக்குளம் 100 கோடி ரூபா செலவில் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளது நியாப் திட்டம் II இன் கீழ் இதனை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை உலகவங்கி வழங்க முன்வந்துள்ளது.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நியாப் திட்டம் II இற்கான கலந்துரையாடலிலே இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் ஒரு கிராமத்துக்கு 80,000 ரூபா வீதம் 150 கிராமங்கள் அபிவிருத்தி செய்வதற்கு இக்கலந்துரையாடலில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் 150 கிராமங்களில் வீதிகள், குளங்கள, வாய்க்கால்கள் மற்றும் பொதுமண்டபங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன் கடல் நீர் ஏரிகளால் சூழல் மாசடைதல், நீர் உவர்த்தன்மையடைதல், போன்றவை தொடர்பாக ஆராய்வதற்கும் இத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வன்னியிலிருந்து கிருபா
26.5.2004