புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, August 16, 2004

பாரதி முன்பள்ளிக்கட்டடம் நேற்று திறந்து வைப்பு

27.7.2004

டென்மார்க் தமிழர் கலாச்சாரத்தின் நிதியுதவியுடன் தமிழர் புனர்வாழ்வுக்கழத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு நெடுங்கேணி அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தால் கனகராஜன் குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாரதி முன்பள்ளி நேற்றுக் காலை 10.00 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக நடா வெட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ஐயம்பிள்ளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிசோர், புளியங்குள பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீப், கிராம சேவகர் தணியாசலம் ஆகியோர் ஏற்றி வைத்தனர். அடுத்து தமிழீழ தேசியக்கொடியினை வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.ஞானவேல் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நிறுவனக் கொடியும் முன்பள்ளிக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.

அடுத்து பாரதி முன்பள்ளிப் பெயர்ப்பலகையினை (பா.உ) திரு.சிவநாதன் கிசோர் திரை நீக்கம் செய்த வைத்தார். அடுத்து முன்பள்ளிக் கட்டிடத்தை தமிழர் புனர்வாழ்வுக் கழக நிறைவேற்றுப்பணிப்பாளர் கே.பி.றெஜி நடாவை வெட்டித் திறந்து வைத்தார்.

தொடர்ந்து சிறப்புரையினை றெஜி, கிசோர், ஞானவேல், ஐயம்பிள்ளை ஆற்றினர். இதில் பெற்றோர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றி: ஈழநாதம் , புதினம்