புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, September 21, 2003

மன்னாரில் வசிக்கும் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர பின்னடிப்பு
யாழிலிருந்து தயா. பகவன் - ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2003, 18:55 ஈழம்

இடம்பெயர்ந்து மன்னார் மாவட்டத்தில் வசித்து வரும் மக்களில் அதிகமானோர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர பின்னடித்து வருகின்றனர்.

வெள்ளாங்குளம், தேவன்பிட்டி, பாலியாறு, அடம்பன், மடு, பாலம்பிட்டி முகாம், மற்றும் பேசாலை ஆகிய இடங்களில் இந்த 3100 குடும்பங்களும் வசிக்கின்றன. இவர்களை குடாநாட்டில் மீளக் குடியமர்த்துதல் தொடர்பாக யாழ். அரச அதிபர் மற்றும் யாழ். திட்டப் பணி;ப்பாளர் ஆகியோர் கடந்த வாரம் அங்கு சென்று ஆராய்ந்தனர். அப்போதே இம் முடிவு கண்டறியப்பட்டது.

ஏனைய 2800 குடும்பங்களும் மன்னாரிலேயே நிரந்தரமாக குடியேற விருப்பம் தெரிவித்துள்ளன. யாழ். குடாவில் இக்குடும்பங்கள் வாழ்ந்த இடங்கள் சிறிலங்கா படையினரின் பிடிக்குள் உள்ளமை இதற்கு காரணமாகும்.

இக்குடும்பங்கள் மன்னாரில் குடியேற அனுமதி மற்றும் புனர்வாழ்வு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மன்னார் அரச அதிபர் உறுதியளித்துள்ளார்.

nantri - Puthinam.com