புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, February 16, 2004

நாச்சிக்குடா பள்ளிவாசலுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அன்பளிப்புக்கள்

கிளிநொச்சி நாச்சிக்குடாவிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஒலிபெருக்கித் தொகுதி ஒன்றினை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

நாச்சிக்குடாப் பகுதியில் முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்ந்து வரும் நிலையில் இவர்களின் மத வழிபாட்டுக்கென கிளிநொச்சி மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் முழங்காவில் அபிவிருத்தி நிறுவனம் ஊடாக 27 ஆயரம் ரூபாய்கள் பெறுமதியான ஒலிபெருக்கிச் சாதனங்கள் பள்ளிவாசல் மௌலவியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழர் புனர்வாழ்வுக் கழக துணை நிறைவேற்றுப் பணிப்பாளர், சுவிஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணிப்பாளர், முழங்காவில் அபிவிருத்தி நிறுவனப் பிரதிநிதிகள், முஸ்லிம் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவிலிருந்து சுகுணன்
16.2.2004
quelle - puthinam.com