புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, October 30, 2003

கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதாரத்தை வளர்க்கும் திட்டங்கள் அறிமுகம்

கிளிநொச்சி மாவட்ட தமிழர்புனர்வாழ்வுக் கழகம் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஆகியன இணைந்து எக்கோ திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் பொதுச் சுகாதாரத்தைப் பேணும் வகையில் 30 புதிய மலசல கூடங்களையும் 25 பொதுக் கிணறுகளையும் புனரமைக்கவுள்ளன.

கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய உதவி அரச அதிபர் பிரிவுகளில் உள்ள பொது இடங்களில் 30 புதிய மலசல கூடங்களையும் அமைப்பதோடு 25 பொதுக்கிணறுகளையும் புனரமைத்து வருகின்றது.

யாழிலிருந்து எழின்மதி
29.10.2003
கிளிநொச்சியில் பத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் பத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கனகாம்பிகைக்குளம், உதயநகர் மேற்கு, இராமநாதபுரம், ஆனைவிழுந்தான், கிராஞ்சி,வாடியடி,கௌதாரிமுனை, புளியம் பொக்கணை, பூநகரி 4ம் கட்டை, இயக்கச்சி ஆகிய இடங்களில் மக்களின் பொதுச்சுகாதாரம் சுகாதார விழிப்புணர்வுச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மேற்படி நிறுவனத்தினால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை நோக்கத்தக்கது.

யாழிலிருந்து எழின்மதி
29.10.2003

nantri-puthinam.com