புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, November 10, 2003

சிறுமியின் உயிர்காக்க நிதிஉதவி செய்யுங்கள்
11-07-2003 - உதயன்


வண்ணார்பண்ணையைச் சேர்ந்த, கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவியான தனபாலசிங்கம் பிரியந்தி (வயது-6) சிறுநீரகம் பாதிக்கப்பட்டதனால் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவருக்கு அவசரமாகச் சந்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குப் பெரும் தொகைப் பணம் தேவையாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள இந்தச் சிறுமியின் தாயார், இரக்க சிந்தையுள்ளவர்களிடம் இருந்து நிதி உதவிகளை எதிர்பார்த்திருக்கின்றார். அவருக்கு உதவ மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் முன்வந்துள்ளது.

சிறுமியின் வைத்தியச் செலவுக்கான நிதியைச் சேகரிப்பதற்கென மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் மானிப்பாய் தேசிய சேமிப்பு வங்கியில் கணக்கொன்றைத் திறந்துள்ளது. உதவ விரும்புவோர் 1-0107-01-1075-2 என்ற கணக்கு இலக்கத்துக்கு நேரடியாக வைப்புச்செய்யலாம். சிறுமியின் உயிரைக் காப்பதற்கு அனைவரும் முன்வந்து நிதி உதவிகளை வழங்கவேண்டும் என்று மானிப்பாய் றோட்டறக்ட் கழக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நன்றி: உதயன்
27 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில் விடப்பட்டுள்ள இரணைமடுக்குளம்
யாழிலிருந்து எழின்மதி ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2003, 21:17 ஈழம்

வட பகுதியின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளம் கடந்த 27 ஆண்டுகளாக எதுவித புனரமைப்புக்கும்உட்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

1866ம் ஆண்டு அமைக்கபட்ட இக்குளம், 1920ம் ஆண்டு 22அடி நீர்மட்டத்திற்கும், 1948ஆம் ஆண்டு 28அடி நீர்மட்டத்திற்கும், 1952ஆம் ஆண்டு 30 அடி நீர்மட்டத்திற்கும், 1977ம் ஆண்டு 34 அடி நீர்மட்டத்திற்கும் என புனரமைப்புச் செய்யபட்டது.

இறுதியாக 1977ஆம் ஆண்டு புனரமைக்கபட்டதற்குப் பின்னர் இதுவரை இந்தக் குளம் எதுவித புனரமைப்புக்கும் உட்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.

இரணைமடுக்குளப் புனரமைப்பிற்காக ஸ்ரீலங்கா அரசோ அல்லது தனியார் நிறுவனஙகள் எதுவுமே முன்வரவில்லை என உரிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இக்குளத்தின் கீழ் 21,985 ஏக்கர் நிலப்பரப்பு நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அது இப்போது புனரமைப்புக்கு உட்படுத்தப்படுவது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

nantri-puthinam.com