புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, March 13, 2004

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த வயது குறைந்தோர் புனர்வாழ்வு மையத்தில் ஒப்படைப்பு

பொய்யான தகவல்களைக் காட்டி புலிகள் இயக்கத்தில் இணைந்த பதினொரு பேர் இன்று அவர்களிற்கான புனர்வாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தினால், இயக்கத்தில் இணைந்த வயது குறைந்தோர் தொடர்பாக ஆராய்வதற்கென அமைக்கப்பட்ட விசேட குழுவின் தலைவரான திரு. காந்தம்மானே இவர்களை நேற்று புனர்வாழ்வு மையத்தில் ஒப்படைத்தார்.

இப்புனர்வாழ்வு மையம் யுனிசெப் நிறுவனத்தின் ஆதரவுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீண்டும் பெற்றோர்களுடன் இணைவதற்கும், கல்வி கற்பதற்கும், தமது வாழ்க்கையை நடத்துவதற்கு தேவைகளிற்கான திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகள் இங்கே வழங்கப்படும்.

எழிலோன் - ஈழம்
13.3.2004
நன்றி - புதினம்.கொம்