புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, November 15, 2003

கிளிநொச்சியில் G.T.Z நிறுவனத்தின் வன்னிக் கிளைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது
யாழிலிருந்து எழின்மதி - சனிக்கிழமை, 15.11.2003, 19:46 ஈழம்

இன்று பிற்பகல் 1 மணிக்கு கிளிநொச்சி வலயக் கல்விப்பணிமனை வளாகத்தி;ல் நடைபெற்ற நிகழ்வில் மங்கள விளக்கினை வலயக் கல்விப்பணிப்பாளர் அரியரத்தினம் ஏற்றிவைத்தார்.

புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லினை தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளரும், G.T.Z நிறுவனப் பிரதிநிதியும் நாட்டி வைத்தனர்.

இந்நிகழ்வில் G.T.Z நிறுவனப் பிரதிநிதிகள், தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் கல்விக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் சிவலிங்கம் மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வில்பத்து காட்டுப் பகுதியைப் புனரமைக்க இத்தாலிய தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று இணங்கியுள்ளது
காவலூர் கவிதன் - வெள்ளிக்கிழமை, 14 .11.2003, 3:37 ஈழம்

இதனடிப்படையில் 4 மில்லியன் யூரோ செலவில், வில்பத்து காட்டுப் பகுதியும், அங்கே காணப்படும் வனவிலங்குகள் பாதுகாப்பும் மீளாய்வு செய்யப்படுவதுடன், புதுப்பிக்கப் படவுமுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தொடரும் ஆறு ஆண்டுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, இப்புனரமைப்புப் பணிக்கான நிதியுதவியை வழங்குமென்றும், அடுத்த மாதம் இப்பணிகளை ஆரம்பிக்க, இத்தாலியிலுள்ள தன்னார்வத் தொண்டர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருவதாகவும் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரி எச்.எம்.டி.சி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

நன்றி-puthinam.com
பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனத்தினரால் போரினால் பாதிப்படைந்த பெண்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது
யாழிலிருந்து எழின்மதி - வியாழக்கிழமை, 13.11.2003, 19:37 ஈழம்

வன்னியில் இயங்கிவரும் இவ் அமைப்பானது வன்னியில் போர் அனர்த்தங்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்களை மேம்படுத்தும் பொருட்டு வெற்றிமனை உளவளத்துணை நிலையம், பெண்கள் தொழிற் பயிற்சி நிலையம், உதயதாரகை தும்புத் தொழிற்சாலை, மலர்ச் சோலை உளவளத் துணை நிலையம் என்பனவற்றையும் முல்லைத்தீவில் 93 சிறுவர்களைக் கொண்டு செந்தளிர் சிறுவர் இல்லத்தினையும் நடாத்திவருகின்றது.

இவ்வாண்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, கோண்டாவில்ப் பகுதியில் தனது கிளையினை. நிறுவியுள்ளதோடு பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை சேகரித்து அதன் மூலம் உதவித்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

நன்றி-puthinam.com