புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, March 03, 2004

தகவல் தொழில் நுட்பப் பூங்கா யாழ்.செயலகப்பொறுப்பில்

வடக்குப் புனர்வாழ்வு, புனரமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காவை யாழ். செயலகம் பொறுப்பேற்றுள்ளது.
ஸ்ரான்லி வீதியில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பூங்கா அரச நிறுவனமாகச் செயற்பட்டது.
வடக்குப் புனர்வாழ்வு, புனரமைப்பு அதிகார சபை செயலிழந்ததுடன் இந்தப் பூங்காவை நடத்துவதற்கான உதவிகளும் நிறுத்தப்பட்டன.
அரச உதவிகள் கிடைக்காததால், இந்த நிறுவனம் நடத்தும் கற்கை நெறிகள் மூலம் கிட்டும் நிதி மூலமே பணிகளை மேற்கொள்ளவேண்டி யுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ். செயலகத்தின் மேற்பார்வையில் இந்த நிறுவனம் தற்சமயம் செயற்படுகின்றது. இந்த நிறுவனத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கான சான்றிதழ்கள் யாழ். அரச அதிபரால் வழங்கப்படுகின்றன.

Quelle - Uthayan
மானிப்பாய் நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களை வெளியேறுமாறு படையினர் அச்சுறுத்தல்

சிறீலங்காப் படையினரின் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் மானிப்பாய் முகுந்தன் நலன்புரி நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக தங்கியிருக்கும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு சிறீலங்கா காவல்த்துறையினர் அச்சுறுத்தி வருவதாக அங்கு வசிக்கும் குடும்பங்களால் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறீலங்காப் படையினரின் போர் நடவடிக்கைகள் காரணமாக 1989ஆம் அண்டு முதல் மாவிட்டபுரம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை முதலான பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த 15 குடும்பங்கள் இந்த முகாமில் வசித்து வருகின்றனர்.

தற்போது இந்த முகாம் அமைந்திருக்கும் இடத்தின் உரிமையாளர் வெளிநாட்டிலிருந்து வந்து அந்த இடம் தனக்கு வேண்டுமென தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு மாத கால தவணையில் அந்த இடத்தில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

அதேவேளை, அந்த இடத்தின் உரிமையாளருடன் அங்கு வந்த சிறீலங்கா காவல்த்துறையினர் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளதுடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த இடத்திலிருந்து அகலாது விட்டால் குடியிருப்பிலுள்ள மக்களை கட்டாயமாக அகற்ற வேண்டி வருமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழிலிருந்து எழின்மதி
3.3.2004
nantri - Puthinam.com
மட்டக்களப்பு மாவடத்திற்கு விசேட கல்வி சலுகைகள் வழங்கக் கோரி மனித சங்கிலிப் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தை கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகப் பிரகடனப்படுத்தி விஷேட சலுகைகளை வழங்குமாறு கோரி இன்று காலை இரண்டு மணிநேர மனித சங்கிலிப் பேராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலையில் வீதியின் இரு மருங்கிலும் ஒன்று சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சுலோகங்களை ஏந்தியவாறு மனித சங்கிலி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட மாணவர் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் முன்னேறிய மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வியியற் கல்லு}ரிக்கான அனுமதியின் போது விஷேட சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றமையை ஆட்சேபித்தே இந்த மனித சங்கிலிப் பேராட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் இந்த மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்த்துறை அதிகாரி சமர திவாகர தெரிவித்தார்.

மட்டக்களப்பிலிருந்து தேனுராள்
2.3.2004
nantri - puthinam.com