புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, February 22, 2005

போக்குவரத்துச் சேவை

பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்ல
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் போக்குவரத்துச் சேவை

போக்குவரத்து வசதியற்று, பாடசாலைகளுக்குச் செல்ல முடியாமல் தங்களுடைய எதிர்காலம் பற்றி கவலையடைந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழும் மாணவர்களின் நலன்கருதி தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போக்குவரத்துச் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெவ்வேறு தற்காலிகமான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் பாடசாலைகளிருந்து தூர இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதால், இங்குள்ள மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதியற்று பெரும் சிரமங்களுக்குள்ளாகிருந்தனர்.

இதனையடுத்து இம்மாணவர்களின் எதிர்கால நலன்கருதியும், கல்வி என்பது சிறுவர்களின் உரிமை என்ற அடிப்படையிலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தற்காலிகக் குடியிருப்புக்கள் மற்றும் நலன்புரி நிலையங்கள் தோறும் வாகனங்களை அனுப்பி காலையில் மாணவர்களை பாடசாலைகளுக்கு ஏற்றிச் சென்று விடுவதுடன், பாடசாலைகள் முடிந்ததும் மீண்டும் மாணவர்களை அந்தந்த குடியிருப்புப் பகுதிகளிலும், நலன்புரி நிலையங்களிலும் கொண்டுசென்று விடுகின்ற சேவைகளைத் தொடர்ந்து வருகின்றது.

0 Comments:

Post a Comment

<< Home