புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, April 17, 2004

தென்மராட்சி தெற்கில் மீளக்குடியேறுவோர் புகைப்படங்களுடன் குடும்ப விபரம் சமர்ப்பிக்க வற்புறுத்தும் படையினர்


தென்மராட்சி தெற்கின் அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதியினுள் மீள்குடியமரும் குடும்பங்கள் தமது குடும்ப அங்கத்துவர்கள் அனைவரையும் உள்ளடங்கியதான குழு புகைப்படம் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என படைத்தரப்பு அறிவித்துள்ளது.

அத்துடன் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான விபரங்களையும் முழுமையாக தம்மிடம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர்கள் பணித்துள்ளதாக தெரியவருகிறது. புகைப்படம் மற்றும் விபரங்களைச் சமர்ப்பித்து உரிய அனுமதியை பெற்றிராத குடும்பங்களை தமது சொந்த இடங்களுகுச் செல்ல படைத்தரப்பு அனுமதி மறுத்துள்ளது.

இதேவேளை படைத்தரப்பால் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட கைதடி, நாவற்குழியின் வடக்குப் பகுதியின் சுமார் முப்பது வீடுகளும் அதேபோன்று அதையண்டிய மறவன்புலவு மேற்கு கிராமத்தில் பன்னிரண்டு வீடுகளுமே மீளக்குடியமரக்கூடிய நிலையில் இருப்பதாக அப்பகுதி விவசாய அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. எஞ்சிய வீடுகளில் பெரும்பாலானவை யுத்த அனர்த்தங்களினால் அழிந்து போயுள்ளதால் அப்பகுதிகளில் தற்காலிக கொட்டகைகளை அமைத்தே இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர முடியும் எனவும் அவ்வமைப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வன்னியிலிருந்து கிருபா - 17.4.2004
நன்றி: ஈழநாதம்