புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, November 20, 2003

சிறீலங்கா, இந்திய இராணுவத்தால் அழிக்கப்பட்ட மகிழவெட்டுவான் மத்திய மருந்தகம் புனரமைக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மகிழவெட்டுவான் மத்திய மருந்தகம் ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும், இந்திய இராணுவத்தினராலும் அழிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்பொழுதே புனரமைக்கப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியோடு 3.3 மில்லியன் ரூபாக்கள் செலவில் மகிழவெட்டுவான் மத்திய மருந்தகம் புனரமைக்கப்பட்ட நிலையில் நேற்று திறக்கப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவுப் பொறுப்பாளர் திருமதி எழுமதி கரிகாலன் வடக்கு-கிழக்கு ஸ்ரீலங்காசுகாதார சேவைகள் துணைப்பணிப்பாளர் கலாநிதி எஸ். குமாரவேற்பிள்ளை, தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பிலிருந்து தேனுராள் -19 .11.2003, 18:27 ஈழம்