புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, June 27, 2004

மாவீரர் நினைவாக ஆயிரம் வீடுகள்

மண்ணுக்காய் மரணித்த மாவீரர் நினைவாக
ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் வன்னி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வறிய மக்களுக்கு ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப் படவிருக் கின்றன.

எதிர்வரும் நவம்பர் மாதம் மாவீரர் தினத்தன்று இந்த வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிப்பதற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் திட்டமிடப்பட்டிருக்கின்றது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரெஜி இந்தத் தகவல்களை உதயனுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இந்த வீடமைப்புத் திட்டத்தின் மூலம், ஒவ்வொன்றும் 25வீடுகளைக் கொண்ட 40மாதிரிக் கிராமங்கள் நிறுவப்படவிருக்கின்றன. இந்த மாதிரிக் கிராமங்களுக்குச் சமீபமாக பாடசாலை, சந்தை, தபாலகம் போன்ற அத்தியாவசிய சேவை நிலையங்கள் அமைந்திருப்பதும் உறுதி செய்யப்படும்.

இந்த ஆயிரம் வீடுகளில் மட்டக் களப்பு மாவட்டத்தில் 600வீடுகளும், வன்னிப் பிரதேசத்தில் 400வீடுகளும் அமைக்கப்படும்.

எமது மண்ணின் விடிவுக்காக தங் களின் இன்னுயிர்களை ஈந்த மாவீரர் களின் நினைவாகவே இந்த வீடமைப் புத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் எமது பிரதேசங்களில் உள்ள வறிய மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். இத்திட் டத்துக்கான பயனாளிகள் மற்றும் இத்திட்டம் முன்னெடுக்கப் படவுள்ள கிராமங்கள் போன்றவற்றைத் தெரிவு செய்யும் பணிகள் தற்போது இடம் பெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்துக்கு வெளிநாடு களில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது தாயக உறவுகள் மனமுவந்து நிதியுதவிகளை வழங்கியுள்ளனர்.

nantri-uthayan

செயற்கை உறுப்பு உற்பத்தி நிலையம்

செயற்கை உறுப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை யாழ்.குடா நாட்டில் அமைப்பதற்கு வெண்புறா| செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது என்று நிறுவனத்தின் யாழ்.மாவட்ட அலுவலக நிர்வாக அலுவலர் ஜி.லோறன்ஸ் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலிப் பகுதியில் இந்த நிலையம் அமைக்கப் படும் என்றும் - இதற்கான ஆரம்ப நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றும் - தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் மிதிவெடிகளில் அவயவங்களை இழந்திருப்பவர்களுக்கு இலவசமாகச் செயற்கை உறுப்புக்கள் பொருத்தப்படவுள்ளன என்றும் நிர்வாக அலுவலர் லோறன்ஸ் மேலும் தெரிவித்தார்.

நன்றி - உதயன்.கொம்