சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்த திட்டமிடல்
சர்வதேச அமைப்புக்களான மால்றெசர் கில்ப்டீன்ஸ்ற் (Malteser Hilfsdienst) மற்றும் அக்சன் எய்ட் (ActionAid) ஆகியவற்றுடனான ஒரு உடன்பாடான செயற்திட்டத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சமீபத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
மால்றெசர் கில்ப்டீன்ஸ்ற் அமைப்பானது யேர்மனி நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு கத்தோலிக்க கருணை அமைப்பாகும். சுனாமி அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கியிருக்கும் சுமார் 650 குடும்பங்களுக்கான சுகாதார, குடிநீர் பேணுதல் மற்றும் சமையல் உபகரணங்களை வழங்குதல் போன்றவையே இவ்வமைப்போடு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். 300,000 அமெரிக்க டொலர்களை உள்ளடக்கிய இச் செயற்பாட்டுக்கான ஒப்பந்தமானது 22.01.2005 இல் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தாலும் மால்றெசர் கில்ப்டீன்ஸ்ற் அமைப்பாலும் இணைந்து கையொப்பமிடப் பட்டது. இத்திட்டமானது ஒரு மாத காலத்திற்குள் செயற்படுத்தப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
அழிவுகளினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடியாக உதவும் பணியில் நன்கு அனுபவம் உடையவர்களும் மனித அவலங்களுக்கு முகம் கொடுத்து கடமையாற்றுபவர்களுமான நெதர்லாந்தைச் சேர்ந்த அக்சன் எய்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தமொன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் 13.01.2005 iகைச்சாத்திடப் பட்டிருந்தது.
பாதிப்புக்குள்ளானவர்களுக்கான உடனடி நிவாரணம், குழந்தைகள், பெண்களுக்கான பிரத்தியேகமான திட்டங்கள், உடனடியானதும் நீண்டகாலத்திற்குமான வாழ்க்கைக்கான தேவைகள், சமூக அடிப்படையான திட்டங்கள், தற்காலிகமானதும் நிரந்தரமானதுமான தங்குமிட வசதிகள், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான வழிவகைகள் இவ் ஒப்பந்தத்தில் அடங்குகின்றன.
சமீபத்தில் அக்சன் எய்ட் அமைப்பைச் சேர்ந்த நன்கு பறிற்றப்பட்ட உளநல நிபுணர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் பராமரிக்கப்படும் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் கடமையில் ஈடுபடுத்தப் பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதொன்று.