புனர்வாழ்வு

NEWS Rehablitation

Friday, February 20, 2004

Novel Ceremony for Preschool Children

A ceremony displaying the capabilities of children from Thiruvalluvar Preschool was held on 12.02.2004 at Kattayrkulam, Vavuniya North. The novel event was organized by T.R.O Vavuniya.

A breathtaking fancy dress parade by the children was staged in addition to the spectacular programme.

Mr. Vinayagamoorthy, Assistant Director of Education Vavuniya North, and several other distinguished guests graced the occasion.

[TRO News section,20.2.2004]
வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர் பெற்றோருக்கிடையிலான கலந்துரையாடல்

முன்பள்ளி சிறுவர்கள் தமிழ் ஆங்கிலம் மொழிகளை எழுத வாசிக்க வேண்டும் என பெற்றோர்கள் விரும்புவதானது அந்த மாணவர்களின் எதிர்கால கல்வியை பாதிக்கும் என்று வவுனியா தெற்கு வலய இணைப்பாளர் திருமதி சிவலிங்கநாதன் அருள்வேல்நாயகி வவுனியாவடக்கு வலய முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கும் போது முன்பள்ளி குழந்தைகளின் ஆற்றல்களை அதிகரிப்பதற்காகவே பள்ளிகள், அதிலே பிள்ளைகள் தாங்கள் என்ன செய்கின்றோம் என்று பகுத்தறிய மாட்டார்கள். அத்துடன் பொருட்களையும் இனம் காணமாட்டார்கள் எனவே பெற்றோர் விலையுயர்ந்த விளையாட்டு பொருட்களை வாங்கி அலுமாரிகளில் பூட்டி வைப்பதைவிட விலை குறைந்த பொருட்களை வாங்கி விளையாட கொடுப்பது சிறப்பானது. தனியார் பிரத்தியேக வகுப்புக்களுக்கு மாணவர்கள் அனுப்பபடுவதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்று வவுனியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த கால போர்காரணமாக முன்பள்ளி சிறார்கள் தமது கல்வியைத் தொடர்வதில் உடல் உள பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக வவுனியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சமுதாய அமைப்புக்கள் தொண்டர் ஸ்தாபனங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உதவி வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு வலயம் செட்டிக்குளம் வலயம் போன்ற பிரதேசங்களில் 155 முன்பள்ளிகளில் 258 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். இந்த வலயங்களில் 5290 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வவுனியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சில வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது, பல ஆசிரியர்கள் வேதனம் எதுவும் இன்றி தமது சேவையினை உணர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தெரிவு செய்யப்பட்ட 45 ஆசிரியர்களுக்கு புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களுக்கு 4000.00 ரூபா சம்பளம் வழங்கியுள்ளதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவிக்கினறது.

வவுனியாவிலிருந்து மணி
19.2.2004