புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, January 11, 2005

சுவிசிலிருந்து 26 தொண்டர்கள் தாயகம் நோக்கிப் பயணம்

10.1.2005

சுவிஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில், சுவிஸ் மக்களின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்புவி நடுக்க ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட 1,000 குடும்பத்தை மீள்குடியேற்றுவதற்கு உதவும் முகமாக, தமது சரீர உதவிகளை செய்வதற்காக 26 தொண்டர்கள் நேற்று (09.01.05) பிற்பகல் 1.00 மணியளவில் தாயகத்தை நோக்கி பயணமாகியுள்ளனர். இக்குழுவில் 9 பெண்கள் உட்பட 13 சுவிஸ் நாட்டவர்களும், 13 ஈழத் தமிழர்களும் அடங்குவர்.

இவர்கள் பாதிப்புற்ற மக்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற ஆவலில் தமது சொந்தச் செலவிலேயே செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத் திட்டத்தை நிறைவேற்றும் முகமாக இவர்களைப் போன்ற தொழில்நுட்பவியலாளர்களைத் தொடர்ந்தும் அனுப்புவதற்கு சுவிஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் திட்டமிட்டுள்ளது. சுவிஸ் நாட்டவர்கள் பலரும் இவ்வாறு செல்வதற்கு முன்வந்திருக்கின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.