10,000 தற்காலிகக் கொட்டகைகள்
சுனாமி அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்காக முதற்கட்டமாக 10,000 தற்காலிகக் கொட்டகைகளை தமிழர் புனர் வாழ்வுக் கழகம் நிர்மானிக்கிறது.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் மேற்படித் திட்டத்திற்கான ஆரம்பகட்டு வேலைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.நலன்புரி நிலையங்களில் பின்வரும் சீர்கேடுகள் கண்டு அறியப்பட்டுள்ளன. அவை உடனடியானத் தீர்த்து வைக்கப்படவேண்டியனவுமாகும்,
மீள்கட்டுமானத்திற்கும், புனரமப்பிற்குமான தாமதங்கள் மற்றும் இடையூறுகள், குடிநீர் பற்றாக்குறை, உணவைத் தாங்களாகவே தயாரிப்பதற்கான வசதிகள் பற்றாக்குறை, சமூகசீர்கேடுகள் சுகாதார சீர்கேடுகள் தோன்றுவதற்கான காரணிகள் அதிகமாக இருத்தல், பாதுகாப்புப் பிரச்சினைகள், பாடசாலைகளை உடனடியாக மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் மீள்கட்டுமானத்திற்கும், புனரமைப்பிற்குமான தாமதங்கள் மற்றும் இடையூறுகளும் மேலே சுட்டிக் காட்டப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் இனம் காணப்பட்டு இத் திட்டம் உருவாகக் காரணமாயிற்று. தமிழர் புனர்வாழ்வுக் கழகமும், உள்ளூர் நிறுவனங்களும் ஒன்றிணைந்து பாதுகாப்பு வலையத்துக்குள் இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப் பட்டிருக்கின்றது.
எடுத்துக்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டத்திற்கான விபரங்கள்
மாவட்டம் | இருப்பிடம் | வசிப்பவர் | தொகை நிதி உதவி | |
Ampara | Thampaddai | 200 | TRO Canada | |
Kadappitty Panankadu | 500 | TRO France | ||
Munaiyoor | 300 | TRO Germany | ||
Karithivu 11th Kurichchi | 21 | TRO Holland | ||
Karithivu 12th Kurichchi | 81 | TRO Holland | ||
Navithanveli | 200 | TRO Denmark | ||
Senaiyur | 25 | TRO Denmark | ||
Batticaloa | Sathurukkondan | 500 | TRO Swiss | |
Thiraimadhu | 3,000 | Action FAIM, TRO Norway, ICRC, TRO USA, TRO Italy | ||
Mullaithivu | Mullaivthivu Town | 800 | TRO/WP-UK | |
Unnapilavu | 360 | GTZ, TRO Germany | ||
Vadduvagal | 135 | Mallties, TRO/WP-UK | ||
Vadamarachchi | Kaddaikadu | 100 | TRO Norway, TRO Finland | |
Vettilaikerny | 50 | TRO Sweden | ||
Alliyavalai | 50 | TRO New Zealand | ||
Uduththurai | 300 | TRO Maltiess | ||
Maruthankerny | 100 | TRO Australia | ||
Chembianpattu | 50 | TRO Italy | ||
Trincomalee | Muthur | |||
Soodaikuda | 58 | TRO Canada | ||
Ralkuli | 08 | TRO Middle East | ||
Thakkuvanagar | 388 | TRO Norway, Gov. Norway | ||
Eachilampattu | ||||
Kallady | 222 | TRO, Gov. Norway | ||
Ilankaithurai | 138 | TRO, Gov. Norway | ||
Kinniya | ||||
Kadalur | 87 | TRO, IOM | ||
Upparu | 40 | TRO, IOM | ||
Kuchchavelli | ||||
Adambodai | 343 | TRO, Gov. Norway | ||
Veeransholai | 193 | TRO, Gov. Norway | ||
Kasimnagar | 297 | TRO, Gov. Norway | ||
Kanrava | 52 | TRO, Gov. Norway | ||
Town Environs | ||||
Alasthoddam | 106 | TRO, Gov. Norway | ||
Shalli | 173 | TRO, Gov. Norway |
தற்காலிகக் கொட்டைகைகள் அமைக்க ஒவ்வொன்றுக்கும் இலங்கை ரூபா 40.000 தேவைப்படுகின்றது. முன்னர் கையளிக்கப் பட்ட கூடாடரங்களின் உள்ளே தாங்க முடியாத வெப்பம் எற்படுவதால் அவை கைவிடப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
இப்பொழுது அமைக்கப்படும் கொட்டைகைகளில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான குடிநீர் மலசல கூடங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. யூனிசெப், ஒக்ஸ்பாம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆகியன இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றன.
ஒவ்வொரு கொட்டைகையும் 216 சதுர அடிகளைக் கொண்டிருக்கும். பத்துக் குடும்பங்களுக்கு ஐந்து மலசல கூடங்கள் வீதமாக அமைத்துக் கொடுக்கப்படும். குடிநீர் விநியோகிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களைக் குடியேற்றியதன் பின்னர் அவர்களுக்கு ஒரு கிழமைக்கான நிவாரணங்கள் வழங்கப்படும் அத்துடன் அவர்களுக்கான சமையல் உபகரணங்கள், வீட்டுத் தளபாடங்கள், உடைகள் போன்றவையும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
1 Comments:
At Monday, February 14, 2005 12:07:00 am, Kangs(கங்கா) - Kangeyan Passoubady said…
தகவலுக்கு நன்றி. ஆனால் தகவல்கள் அருகாமையில் இல்லாமல் மிகவும் கீழே உள்ளன.
Post a Comment
<< Home