புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, February 13, 2005

10,000 தற்காலிகக் கொட்டகைகள்

சுனாமி அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்காக முதற்கட்டமாக 10,000 தற்காலிகக் கொட்டகைகளை தமிழர் புனர் வாழ்வுக் கழகம் நிர்மானிக்கிறது.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் மேற்படித் திட்டத்திற்கான ஆரம்பகட்டு வேலைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களில் பின்வரும் சீர்கேடுகள் கண்டு அறியப்பட்டுள்ளன. அவை உடனடியானத் தீர்த்து வைக்கப்படவேண்டியனவுமாகும்,
மீள்கட்டுமானத்திற்கும், புனரமப்பிற்குமான தாமதங்கள் மற்றும் இடையூறுகள், குடிநீர் பற்றாக்குறை, உணவைத் தாங்களாகவே தயாரிப்பதற்கான வசதிகள் பற்றாக்குறை, சமூகசீர்கேடுகள் சுகாதார சீர்கேடுகள் தோன்றுவதற்கான காரணிகள் அதிகமாக இருத்தல், பாதுகாப்புப் பிரச்சினைகள், பாடசாலைகளை உடனடியாக மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் மீள்கட்டுமானத்திற்கும், புனரமைப்பிற்குமான தாமதங்கள் மற்றும் இடையூறுகளும் மேலே சுட்டிக் காட்டப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் இனம் காணப்பட்டு இத் திட்டம் உருவாகக் காரணமாயிற்று. தமிழர் புனர்வாழ்வுக் கழகமும், உள்ளூர் நிறுவனங்களும் ஒன்றிணைந்து பாதுகாப்பு வலையத்துக்குள் இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப் பட்டிருக்கின்றது.

எடுத்துக்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டத்திற்கான விபரங்கள்
































































































































































































































மாவட்டம்இருப்பிடம்வசிப்பவர்தொகை நிதி உதவி
AmparaThampaddai200
TRO
Canada
Kadappitty

Panankadu

500TRO
France
Munaiyoor300TRO
Germany
Karithivu
11th

Kurichchi

21TRO
Holland
Karithivu
12th

Kurichchi

81TRO
Holland
Navithanveli200TRO
Denmark
Senaiyur25TRO
Denmark
BatticaloaSathurukkondan500TRO
Swiss
Thiraimadhu3,000Action
FAIM,
TRO
Norway,
ICRC,
TRO
USA,
TRO
Italy
MullaithivuMullaivthivu
Town
800TRO/WP-UK
Unnapilavu360
GTZ,
TRO
Germany
Vadduvagal135Mallties,
TRO/WP-UK
VadamarachchiKaddaikadu100TRO
Norway,
TRO
Finland
Vettilaikerny50TRO
Sweden
Alliyavalai50TRO
New
Zealand
Uduththurai300TRO
Maltiess
Maruthankerny100TRO
Australia
Chembianpattu50TRO
Italy
TrincomaleeMuthur
Soodaikuda58TRO
Canada
Ralkuli
08TRO
Middle
East
Thakkuvanagar388TRO
Norway,
Gov.
Norway
Eachilampattu
Kallady222TRO,
Gov.
Norway
Ilankaithurai138TRO,
Gov.
Norway
Kinniya
Kadalur87TRO,
IOM
Upparu40
TRO,
IOM
Kuchchavelli
Adambodai
343TRO,
Gov.
Norway
Veeransholai193TRO,
Gov.
Norway
Kasimnagar297TRO,
Gov.
Norway
Kanrava52TRO,
Gov.
Norway
Town
Environs
Alasthoddam
106
TRO,
Gov.
Norway
Shalli173TRO,
Gov.
Norway







தற்காலிகக் கொட்டைகைகள் அமைக்க ஒவ்வொன்றுக்கும் இலங்கை ரூபா 40.000 தேவைப்படுகின்றது. முன்னர் கையளிக்கப் பட்ட கூடாடரங்களின் உள்ளே தாங்க முடியாத வெப்பம் எற்படுவதால் அவை கைவிடப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

இப்பொழுது அமைக்கப்படும் கொட்டைகைகளில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான குடிநீர் மலசல கூடங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. யூனிசெப், ஒக்ஸ்பாம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆகியன இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றன.

ஒவ்வொரு கொட்டைகையும் 216 சதுர அடிகளைக் கொண்டிருக்கும். பத்துக் குடும்பங்களுக்கு ஐந்து மலசல கூடங்கள் வீதமாக அமைத்துக் கொடுக்கப்படும். குடிநீர் விநியோகிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களைக் குடியேற்றியதன் பின்னர் அவர்களுக்கு ஒரு கிழமைக்கான நிவாரணங்கள் வழங்கப்படும் அத்துடன் அவர்களுக்கான சமையல் உபகரணங்கள், வீட்டுத் தளபாடங்கள், உடைகள் போன்றவையும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

கடனுதவி

வவுனியாவில் சுய தொழில் வாய்ப்பை ஊக்கிவிப்பதற்கு கடனுதவி

வவுனியா மாவட்டத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சுயதொழில் வாய்ப்பை ஊக்கிவிக்கும் நோக்குடன் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழும் மக்கள் மத்தியில் கடனுதவி வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்து முன்னெடுத்து வருகின்றது.

அவ்கையில் கடந்த புதன்கிழமை (09.02.2005) அன்று பூம்புகார் என்னும் இடத்தில் 30 குடும்பங்களுக்கு நெக்கோட் திட்ட நிதி உதவியுடன் மூன்று இலட்சம் ரூபா கடனை வவுனியா மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கியுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபா தொகையென வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் உதவியானது சுய தொழில்வாய்ப்பை இழந்து வாழும் குடும்பங்களுக்கு ஊக்கிவிப்பாக அமையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு

ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு ஒப்படைக்கும் விழா


கடந்த ஆண்டு 26.12.2004 ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பேரழிவு காரணமாக தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ள வடக்குக் கிழக்கு பிரதேச வாழ் மக்களுக்கு இடைக்காலக் குடியிருப்புக்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமைத்து குடியிருத்தி வருகின்றது.

அதன் தொடர் வேலைத்திட்ட நடவடிக்கையாக அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பட்டைத் திடலில் 150 வீடுகளைக் கொண்ட தற்காலிகக் குடியிருப்பு ஒன்றினை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமைத்துள்ளது. இத் தற்காலிகக் குடியிருப்புக் கிராமமானது எதிர்வரும் புதன்கிழமை (16.02.2005) மாலை 4.00 மணியளவில் திறந்துவைக்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுள் 150 குடும்பங்களுக்கு இவ்வீடுகள் ஒப்படைக்கப் படவுள்ளன. இக்குடியிருப்பின் அடிப்படைத் தேவைகளைப் பொறுத்து கணிசமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய குடும்பங்களுக்கான குடியிருப்புக்களையும் அமைப்பதற்கான வேலைத்திட்டச் செயற்பாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஈடுபட்டுள்ளது என்பதும் குடிப்பிடத்தக்கதாகும்.

இலவச படகு

ஆழிப்பேரலையில் முற்றாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மீனவர்களிற்கு நம்பிக்கையூட்டி அவர்களை மீண்டும் தம் வழமையான வாழ்க்கைக்கு செல்ல உதவும் வகையில் இலண்டன் சிறீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் 25,000 பவுண்ஸ் செலவில் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பின் தொழில்நுட்பம், மற்றும் முகாமைத்துவ உதவியுடன், சிலாவத்தை முல்லைத்தீவில் இலவச படகும், மற்றும் இயந்திரம் திருத்தும் நிலையமும் அமைத்துகொடுத்துள்ளது.

இதில் முதற்கட்டமாக திருத்தப்பட்ட படகுகள் மற்றும் இயந்திரங்கள், கடந்த 7ம் திகதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. மீனவர்களின் தேவையை அறிந்து இச்சேவையை முல்லை மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஒருங்கிணைத்தது