ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 வீடுகள்!
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளது. இத்தகவலை கிளிநொச்சி மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்க செயலர் க.கணேஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்ää கிளிநொச்சி மாவட்ட கரைச்சிää கண்டாவளைää பூநகரிää பளைப் பிரதேச செயலர் பிரிவுகளில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கென ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளதெனவும்ää ஒவ்வொரு வீடும் 500 சதுர அடிகொண்ட ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதெனவும் இதற்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் திட்;டமிடல் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதெனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
<< Home