புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, March 01, 2005

சிறுவர்களுக்கு கற்றல் செயற்பாட்டு உபகரணங்கள்

நலன்புரி நிலையங்களில் வாழும் சிறுவர்களுக்கு
கற்றல் செயற்பாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு


புனர்வாழ்வுக் கழகத்தின் சேவையில் திருப்தியடைகின்ற பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வப்போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து பல்வேறு சேவைகளை செய்துவருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் தமிழர் புனர்வாழ்வுக் கழக அம்பாறை அலுவலகத்திற்கு வருகை தந்த சமூக நல அமைச்சின் அலுவலர்களும் ஹேமாஸ் கம்பனி அலுவலர்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் பராமரிக்கப்படும் ஏழு நலன்புரி நிலையங்களுக்கு கற்றல் செயற்பாட்டு உபகரணங்களை வழங்கி, சிறுவர்களின் எதிர்கால செயற்பாட்டிற்கு உதவி நல்கியுள்ளனர்.

Save the Children நிறுவனத்தினரும் அம்பாறை மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் பராமரிக்கப்படுவரும் முன்பள்ளிகளில் மிகுந்த அக்றை காட்டத்தொடங்கியுள்ளனர். இது மிகுந்த மகிழ்ச்சி தரும் ஓர் விடயமாகும்.

25.02.05 அன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்பள்ளி கல்வி மேம்பாட்டு நிலைய இணைப்பாளர் செல்வி ச.உதயாழினியிடம் Save the Children நிறுவன அதிகாரி மு.பத்மநாதன் (Parnership Development Manager) ஒரு தொகுதி கற்றல் செயற்பாட்டு உபகரணங்களை கையளித்தார். இது அம்பாறை மாவட்டத்தில் உள்ள 37 முன்பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக இணைப்பாளர் செல்வி ச.உதயாழினி தெரிவித்தார்.

இதேபோன்று Operation Blessing International நிறுவனத்தினர் 25.02.05 அன்று கவடாப்பிட்டியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் பராமரிக்கப்படும் நலன்புரி நிலையத்திற்கு சிறுவர்களுக்கான கற்றல் செயற்பாட்டு உபகரணங்கள், பாடசாலை உபகரணங்கள் என்பனவற்றை வழங்கியதுடன் அதன் ஆசிய பிராந்தியப்பொறுப்பாளர் குமாரிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாட்டில் மிகுந்த திருப்தி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

26.02.05 அன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நலன்புரி நிலையத்திற்கு மன்னாரில் இருந்து வருகை தந்த நண்பன் வாரியம் எனும் நிறுவனத்தினர் அவர்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் கவடாப்பிட்டியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற முன்பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்களை மாணவர்களிடம் கையளித்தனர்.

இந்த வகையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து பல்வேறு நிறுவனங்கள் தங்கள் செயற்பாட்டை அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments:

Post a Comment

<< Home