புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, November 11, 2003

யுத்த நிறுத்தத்தின் பின்னர், மட்டுநகர் பகுதியில் 5000க்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியமர்வு
யாழிலிருந்து எழின்மதி-திங்கட்கிழமை, 10.11.2003, 20:04 ஈழம்

போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப் பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5,734 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுக்கழகத் திட்டப்பணிப்பாளர் எஸ். ஜெயராம் தெரிவித்துள்ளார்.

1990-ம் ஆண்டு ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை மற்றும் இன வன்முறைகள் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மட்டக்களப்பின் 12 உதவி அரச அதிபர் பிரிவுகளான வெல்லாவெளி, காத்தான்குடி, ஆரையம்பதி, வவுணதீவு, வாழைச்சேனை, வாகரை, ஓட்டமாவடி, கோரளைப்பற்றுமத்தி, ஏறாவூர், செங்கலடி, கிரான், களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 5,734 குடும்பங்களே தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்ந்துள்ளன.

நன்றி-eelampage.com
தளிர் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 5000ற்கும் அதிகமான சிறுவர்கள் பயன்பெறுகிறார்கள்
யாழிலிருந்து எழின்மதி-திங்கட்கிழமை, 10 .11.2003, 20:03 ஈழம்

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டின் கீழ் இயங்கும் -தளிர்- சிறுவர் சேமிப்புத்திட்டத்தின் கீழ் 5,984 சிறுவர்கள் பயன்பெற்று வருகின்றனர்

கிளிநொச்சியில் 2,443 சிறுவர்களும், முல்லைத்தீவில் 2,351 சிறுவர்களும், மல்லாவியில் ஆயிரத்து 5 சிறுவர்களும், வவுனியாவில் 185 சிறுவர்களும் கிராமிய அபிவிருத்தி வங்கிகளுடாக தளிர் சிறார் சேமிப்புத் திட்டத்தினூடாகப் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் கிராமிய அபிவிருத்தி வங்கி மக்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடமாடும் சேவையினை மேற்கொண்டு வருகின்றது.

நன்றி-eelampage.com
முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 முன்பள்ளிகள் வசதிகளற்ற நிலையில் இயங்குகின்றன
யாழிலிருந்து எழின்மதி - திங்கட்கிழமை, 10.11.2003, 20:01 ஈழம்

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பாண்டியன்குளம் அபிவிருத்திப் புனர்வாழ்வுக்கழகத்தின் கீழ் 65 முன்பள்ளிகள் அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றன.

1,541 மாணவர்களை கொண்டு இயங்கிவரும் இம்முன்பள்ளிகளில் 17 முன்பள்ளிகளில் மட்டும் விளையாட்டு முற்றம் உள்ளது. ஏனைய பாடசாலைகளில் விளையாட்டு முற்றங்கள் ஏதும் இல்லை.

இம் முன்பள்ளிகள் அனைத்தும் அடிப்படை வசதிகளின்றி தற்காலிக கொட்டகைகளில் இயங்கி வருகின்றன.

நன்றி-eelampage.com