புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, August 02, 2003

ஐப்பானிய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் வன்னி விஜயம்
[வன்னியிலிருந்து கிருபா - சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2003, 17:55 ஈழம்]

ஐப்பானிய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் (ஓகஸ்ட் 4, 5, 6 ஆம் திகதிகளில்) வன்னி விஜயத்தின் போது அரசியல்த்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (T.R.O) ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.

ஐப்பானிய அரச சார்பற்ற நிறுவனங்களின் தூதுக்குழு ஒன்று இம்மாதம் 4, 5, 7 ஆம் திகதிகளில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் கிளிநொச்சியில் தங்கியிருக்கும் போது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கிளிநொச்சி, முல்லைத்தீவில் இயங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களைச் சந்திக்கவுள்ளனர். இவ்விஜயத்தின் போது போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் பார்வையிடவுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்களை 5ம் திகதி சந்திக்கவுள்ளனர். இச்சந்திப்பின் போது வடக்கு-கிழக்கு பகுதியைச் சேர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி பற்றிய விடுதலைப் புலிகளின் கொள்கைத் திட்டங்களை அறிந்து கொள்ள ஆவலாயுள்ளனர். அத்துடன் அப்பிரதேசங்களின் சேர்ந்த மக்களின் தேவைகள் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.

இவ்விஜயத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் பெயர் விபரம்:

Mr.Yuzo OTA - Director General, Refugee Assistance Headquarters (RHQ)

Mr.Shinsuke OKWA - Official, Humanitarian Assistance Division, Multilateral Compartment, Ministry of Affairs (MOFA)

Ms.Etsuko NEMOTO - President, Bridge Asia Japan (BAJ)

Mr.Naoto MARUYAMA - Project officer, The Association of medical Doctors of Asia (AMDA)

Mr.Shin OHARA - Staff, Planning & Coordination Division, Refugee Assistance Headquarters (RHQ)

Ms.Naomi INOUE - Project officer, Telecom For Basic Human Needs (BHN)

Mr.Eiki SASAI - Representative in Sri Lanka, The Japan center for Conflict


BAJ, AMDA ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பின்பு வன்னியில் இயங்கி வருகின்றன