புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, November 09, 2003

தென்மராட்சி அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இன்று சாவகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் புனர் வாழ்வுக்கழக யாழ். மாவட்ட கிளை நிறுவனமான தென்மராட்சி அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இன்று சாசகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரியின் ஐயா கடைச் சந்தப் பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சங்கானை கிராம சேவையாளர் வேலாயுதம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர்களை தென்மராட்சிக் கோட் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கலைவாணன், சாவகச்சேரி ஓய்வுபெற்ற மருத்துவ அதிகாரி அருளானந்தம் உட்பட பலர் ஏற்றி வைத்தனர்.

தமிழர் புனர்வாழ்வுக்கழக் கொடியினை யாழ்.மாவட்ட தமிழர் புனர் வாழ்க்கழகப் பொறுப்பாளர் ஜெயராஜ் ஏற்றி வைத்தார்.

அடுத்து பெயர்ப்பலகையினை திரைநீக்கம் இடம்பெற்ற பின்னர் தொடர்ந்து கட்டடத்தினை தென்மராட்சி பிரதேச செயலர் சிறீனிவாசன் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்.

கொழும்பிலிருந்து சேரலாதன் 7.11.2003
nantri-eelampage
தமிழர் தாயகப் பகுதிகளில் அமைந்துள்ள பாலங்களை போரின்பொழுது அரசு திட்டமிட்டு அழித்துள்ளது.

தமிழர் தாயகத்தின் பல பகுதிகள் ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படை நடவடிக்கைகளின் போது பல பாலங்கள் படையினரால் தகர்க்கபட்டுள்ளதாக புள்ளி விபரம் ஒன்றில் தெரிவிக்கபட்டுள்ளது.

தகர்க்கபட்ட பாலங்களில் சில பாலங்கள் மட்டுமே திருத்தப்பட்டுள்ளன. பல பாலங்கள் இதுவரை திருத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளன.

பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதை அடுத்து பாலங்களை திருத்தம் செய்யும் பணி தாமதமாகியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தானதை அடுத்து படையினரால் தகர்க்கபட்ட பாலங்களை திருத்தியமைக்கும் பணிகளை பல நிறுவனங்கள் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்ட போதிலும் இதுவரையில் சில பாலங்கள் மட்டுமே திருத்தியமைக்கபட்டுள்ளன. ஏனையவை திருத்தியமைக்கப்படாத நிலையிலேயே உள்ளன.

இந்நிலை தொடருமானால் பாலங்களைக் கடந்து பயணம் செய்யும் மக்களும் ஊர்திகளும் பலத்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கபட்டுகின்றது.

nantri-eelampage
யாழ் தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல புனரமைப்பு

யாழ் தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல புனரமைப்பு தீவகப் பொது அமைப்புக்களின் துணையோடு துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1991ம் ஆண்டு ஸ்ரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னர் கடந்த ஆண்டு முதல் சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கபட்டு வருகின்றது என தீவக அரசியற்றுறைக் கோட்டப் பொறுப்பாளர் அருந்தவம் தெரிவித்துள்ளார்.

தீவகத்தின் அல்லைப்பிட்டி, துறையூர், அம்பிகைநகர், மெரிஞ்சிமுனை, தம்பாட்டி, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், வேலணை வைத்திலிங்கம் துரைசாமி மத்திய மகா வித்தியாலயம், வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் என்பன இணைந்து தற்போது புனரமைப்புப் பணியினை மேற்கொண்டுள்ளன.

தற்போது அங்கு வித்துடல்கள் விதைக்கபட்ட நான்கு கல்லறைகளும் 135 நினைவுக்கற்களும் அமைக்கப்பட்டுள்ளன.

nantri-eelampage