Batticaloa TRO office attacked by unidentified men wtih a grenade.
[TRO News section, August 07, 2003 07:00 GMT]
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு பணிமனை மீது, 6.8.2003 அன்று இனந்தெரியாதோர் கைக்குண்டு வீசித் தாக்கியுள்ளனர். மட்டக்களப்பு மகிழடி வீதியில் அமைந்திருக்கும், புனர்வாழ்வுக்கழக பணிமனைமீது 6.8.2003 அன்று இரவு 8.20 மணியளவில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கைக்குண்டைவீசியஇனந்தெரியாதோர் ஓடித்தப்பித்துள்ளனர். இக்கைக்குண்டுத் தாக்குதலில், பணியக வளாகத்தில் நின்ற, பிரித்தானியாவைச் சேர்ந்த மிதிவெடியகற்றும் நிறுவனம் ஒன்றின் வாகனம் ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளது. .இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் பற்றி கண்காணிப் புக் குழு மற்றும் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பில், தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிமனை மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், இத்தகையதொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.