புனர்வாழ்வு

NEWS Rehablitation

Thursday, December 23, 2004

ஈச்சிலம்பற்று வெள்ளத்தால் முற்றாகப் பாதிப்பு

20.12.2004

திருக்கோணமலை மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு குறைவடைந்த போதிலும் ஈச்சிலம்பற்று பிரதேச மக்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான நிவாரணப் பொருட்களை எவரும் வழங்கி வைக்கவில்லை.

உணவுக்கு கஸ்டப்படும் நிலையில் இப்பகுதி மக்கள் தொடர்ந்தம் இருக்கின்றனர். பல இடங்களில் 4 அடிக்கும் அதிகமான வெள்ளம் காணப்படுகின்றது. வெருகல் ஆற்று நீர் மட்டம் உயர்வடைந்தமை காரணமாக ஈச்சிலம்பற்று பிரதேசம் முற்றாக பாதிப்படைந்துள்ளது.

போக்குவரத்து துண்டிக்கப்பட்மை காரணமாக நிவாரணப் பொருட்களை தொண்டர் நிறுவனங்கள் சகல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யுனிசெப் நிறுவனம் சுமார் 150 குடும்பங்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை இன்று அனுப்பி வைத்துள்ளன. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஞாயிறு திங்கட்கிழமைகளில் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

திருக்கோணமலை சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் கனடாவில் உள்ள திருக்கோணமலை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் 300ää000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். இவற்றினை மக்களுக்கு நேரடியாக வழங்க முடியாத நிலையில் ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் க. உமாமகேஸ்வரனிடம் கையளித்துள்ளனர். மழை வெள்ளம் குறைவடைந்தாலும் ஆற்று வெள்ளமே பெருமளவிலான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Quelle Puthinam.com

இயற்கை சீற்றத்தில் தமிழர் தாயகம்

கனடிய தமிழ் வானொலி மூலம் 72,225 கனடிய டொலர் நிதி உதவி!!
18.12.2004

கடந்த சில நாட்களாக தமிழர் தாயகத்தில் இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கனடிய தமிழ் வானொலி மூலம் நேயர்கள், வர்த்தக நிறுவனங்கள், கலைஞர்கள், இணைந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டது.

டிசம்பர் மாதம் 17ம் திகதி வெள்ளி இரவு 9:00 மணிவரை கனடிய தமிழ் வானொலியின் கலையகத்திற்கு வந்து சேர்ந்த நிதியான 72,225 கனடிய டொலர்களை முதற்கட்டமாக துரித பணமாற்று சேவைய10டாக நேரடியாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அங்கு அனுப்பப்பட்ட நிதி 60 லட்சம் இலங்கை ரூபாய்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு கொழும்பில் கையளிக்கப்பட்டது.

இந் நிதியில் கொழும்பிலிருந்து உடனடியாக பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு நிவாரண உதவிகள் அனுப்பப்படுகின்றன என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிப்பாளர் றெஜி கனடியத் தமிழ் மக்களிற்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இங்கு சேகரிக்கப்படும் நிதி தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். கருணை உள்ளம் படைத்த கனடிய மக்களிற்கு கனடியத் தமிழ் வானொலி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Quelle - Puthinam.com