புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, November 02, 2003

கிளிநொச்சியில் அன்புச்சோலை மூதாளர் பேணலகத்திற்கு நிரந்தரக் கட்டடம்

தமிழர் புனர் வாழ்வுக் கழத்தின் கீழ் இயங்கி வருகின்ற சமுதாய முன்னேற்ற நிலையத்தினால் கிளிநொச்சியில் அமைந்துள்ள அன்புச்சோலை மூதாளர் பேணலகத்திற்கான நிரந்தர கட்டடம் அமைக்கபட்டு வருகின்றது. இதற்கான நிதியுதவியினை சுவிஸ் இளைஞர் சேவைகள் மன்றம் வழங்கியுள்ளது.

இதன் முதற்கட்டமாக சுவிஸ் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கபட்ட நிதியுதவியில் 90x32 அடி கொண்ட நிரந்தரக் கட்டடம் அமைக்கபட்டு வருகின்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இம்மூதாளர் பேணலகத்தில் அடிப்படைவசதிகள் ஏதுமற்ற நிலையில் தற்காலிக கொட்டகைகளில் நூற்றுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த பராமரிப்போர் அற்ற நிலையில் இனங்காணப்பட்ட முதியோர்கள் பராமரிக்கபட்டு வருகின்றனர்.

யாழிலிருந்து எழின்மதி
2.11.03