புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, December 09, 2003

18 ஆயிரத்து 600 மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உதவி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கடந்த இரு வருடங்களில் மட்டும் 18 ஆயிரத்து 600 மாணவர்களை பாடசாலைகளில் இணைத்து விடுபட்ட கல்வியைத் தொடர உதவியுள்ளனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக தமது பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விட்டு விட்ட மாணவர்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பல்வேறு பாடசாலைகளில் இணையச் செய்துள்ளது என கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்மாணவர்களுக்கான கல்விசார் உதவிகள் யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்மாறன்-ஈழம்
09.12.2003,
நன்றி: வீரகேசரி