புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, October 28, 2003

கடந்த காலப் போர் காரணமாக கடற்தொழிலாளர்கள் பொருண்மிய இழப்பினை எதிர் கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்களே இவ்வாறு பெருமளவு பொருண்மிய இழப்பை எதிர்கொண்டுள்ளனர். தற்போதய சூழலில் இவர்களது சுயசார்புப் பொருண்மியத்தை கட்டியெழுப்பும் திட்டங்களை மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும் என மட்டு - அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப்
பொறுப்பாளர் கௌசல்யன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கரைவலைத தொழிலாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய போதே கௌசல்யன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணி தொடக்கம் 2 மணி வரை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லு}ரியில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் 180 கரைவலைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தமது தொழில் சார்ந்த பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

மட்டக்களப்பிலிருந்து தேனுராள் -25.10.2003
nantri-puthinam.com
வெற்றிமனை பெண்கள் உளவளத்துணை நிலைய ஆண்டு விழா நடைபெறவுள்ளது.

உளநலம் குன்றிய பெண்களுக்கான வெற்றிமனை பெண்கள் உளவளத்துணை நிலையத்தின் ஆண்டு நிறைவு விழா 31ம் திகதி நடைபெறவுள்ளது.

போர் அனர்த்தங்களால் உள ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உளவள நிலையமாக 1991ல் வெற்றிமனை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்ட்டது.

எதிர்வரும் 31ம் திகதி வெற்றிமனை 12வது ஆண்டை பூர்த்தி செய்கின்றது. வெண்புறா செயற்கை உறுப்பு உற்பத்தி நிறுவனம் பயனாளிகளுக்கு சுழற்சி முறை கடன்களை வழங்கவுள்ளது. ஐ.நா அபிவிருத்தித்திட்ட நிதியுதவியுடன் இந்த சுழற்சி முறைக்கடன் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

100 பயனாளிகளுக்கு சுயவருமானத்தைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் 30 லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து எழின்மதி
22.10.03
nantri-puthinam.com

வெண்புறா செயற்கை உறுப்பு உற்பத்தி நிறுவனம் 255 செயற்கை கால்களை வழங்கியுள்ளது

வெண்புறா செயற்கை உறுப்பு உற்பத்தி நிறுவனம் புதிய தொழில் நுட்பத்தில் 255 செயற்கை;கால்களை இதுவரை உற்பத்தி செய்து வழங்கியுள்ளது.

கடந்த காலங்களில் வெண்புறா நிறுவனம் சிறிலங்கா அரசு வன்னி மீது விதித்திருந்த தடைகளால் போதிய பொருத்தமான வளங்கள் இன்மையால் பழைய தொழில் நுட்பத்தினாலான பாரம் கூடிய குறுகிய கால பயன்பாட்டுக்குரியதுமான கால்களையே உற்பத்தி செய்து வந்தது.

இப்பொழுது நீண்ட காலத்துக்கு பயன்படுத்தக் கூடிய செயற்கைக்கால்களை வெண்புறா நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது. பாரம் குறைந்த பிளாஸ்டிக்கிலால் ஆன இக்கால்கள் இவ்வாண்டில் இதுவரை 255 உற்பத்தி செய்யப்ட்டுள்ளன.

இந்த முயற்சிகளுக்கு லண்டன் தமிழர் புனர்வாழ்வுக்கழகக் கிளை உதவிகளை வழங்கி வருகின்றது.

யாழிலிருந்து எழின்மதி
22.10.03
nantri-puthinam.com