புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, February 13, 2005

கடனுதவி

வவுனியாவில் சுய தொழில் வாய்ப்பை ஊக்கிவிப்பதற்கு கடனுதவி

வவுனியா மாவட்டத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சுயதொழில் வாய்ப்பை ஊக்கிவிக்கும் நோக்குடன் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழும் மக்கள் மத்தியில் கடனுதவி வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்து முன்னெடுத்து வருகின்றது.

அவ்கையில் கடந்த புதன்கிழமை (09.02.2005) அன்று பூம்புகார் என்னும் இடத்தில் 30 குடும்பங்களுக்கு நெக்கோட் திட்ட நிதி உதவியுடன் மூன்று இலட்சம் ரூபா கடனை வவுனியா மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கியுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபா தொகையென வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் உதவியானது சுய தொழில்வாய்ப்பை இழந்து வாழும் குடும்பங்களுக்கு ஊக்கிவிப்பாக அமையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

0 Comments:

Post a Comment

<< Home