பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு
ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு ஒப்படைக்கும் விழா
கடந்த ஆண்டு 26.12.2004 ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பேரழிவு காரணமாக தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ள வடக்குக் கிழக்கு பிரதேச வாழ் மக்களுக்கு இடைக்காலக் குடியிருப்புக்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமைத்து குடியிருத்தி வருகின்றது.
அதன் தொடர் வேலைத்திட்ட நடவடிக்கையாக அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பட்டைத் திடலில் 150 வீடுகளைக் கொண்ட தற்காலிகக் குடியிருப்பு ஒன்றினை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமைத்துள்ளது. இத் தற்காலிகக் குடியிருப்புக் கிராமமானது எதிர்வரும் புதன்கிழமை (16.02.2005) மாலை 4.00 மணியளவில் திறந்துவைக்கப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுள் 150 குடும்பங்களுக்கு இவ்வீடுகள் ஒப்படைக்கப் படவுள்ளன. இக்குடியிருப்பின் அடிப்படைத் தேவைகளைப் பொறுத்து கணிசமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய குடும்பங்களுக்கான குடியிருப்புக்களையும் அமைப்பதற்கான வேலைத்திட்டச் செயற்பாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஈடுபட்டுள்ளது என்பதும் குடிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment
<< Home