புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, March 03, 2004

மானிப்பாய் நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களை வெளியேறுமாறு படையினர் அச்சுறுத்தல்

சிறீலங்காப் படையினரின் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் மானிப்பாய் முகுந்தன் நலன்புரி நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக தங்கியிருக்கும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு சிறீலங்கா காவல்த்துறையினர் அச்சுறுத்தி வருவதாக அங்கு வசிக்கும் குடும்பங்களால் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறீலங்காப் படையினரின் போர் நடவடிக்கைகள் காரணமாக 1989ஆம் அண்டு முதல் மாவிட்டபுரம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை முதலான பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த 15 குடும்பங்கள் இந்த முகாமில் வசித்து வருகின்றனர்.

தற்போது இந்த முகாம் அமைந்திருக்கும் இடத்தின் உரிமையாளர் வெளிநாட்டிலிருந்து வந்து அந்த இடம் தனக்கு வேண்டுமென தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு மாத கால தவணையில் அந்த இடத்தில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

அதேவேளை, அந்த இடத்தின் உரிமையாளருடன் அங்கு வந்த சிறீலங்கா காவல்த்துறையினர் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளதுடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த இடத்திலிருந்து அகலாது விட்டால் குடியிருப்பிலுள்ள மக்களை கட்டாயமாக அகற்ற வேண்டி வருமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழிலிருந்து எழின்மதி
3.3.2004
nantri - Puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home