புனர்வாழ்வு

NEWS Rehablitation

Wednesday, September 17, 2003

மக்கள் மீளக் குடியேறிய குப்பிளானில் மிதிவெடி அபாயம். ஜ யாழிலிருந்து தயா. பகவன் - செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2003, 20:23 ஈழம்

மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்ட குப்பிளான் பகுதியில் இன்னும் மிதிவெடி அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்களால் அதிகளவில் பாவிக்கப்படும் நான்கு இடங்களில் கூடுதலாக மிதிவெடிகள் இருப்பதாக குப்பிளான் கிராம அலுவலர் எச்சரித்துள்ளார்.

பலாலி படைத்தள முன்னரங்க நிலைகளுக்கு அண்மையில் உள்ள குப்பிளான் பகுதி 1995ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் போது படையினரின் பாதுகாப்பு அரண்கள் கூடியளவு அமைக்கப்பட்ட பிரதேசமாக மாறியது. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்கள் வாழ அனுமதிக்கப்பட்ட குப்பிளானின் ஒரு பகுதியில், படையினரின் மண்ணரண் ஊடறுத்துச் செல்கின்றது.

தற்போது மக்கள் கூடுதலாக மீளக் குடியமர்ந்து வாழும் இக்கிராமத்தில் மிதிவெடி அபாயம் இன்னும் நீங்கவில்லை என அப்பகுதி கிராம சேவகர் பரமநாதன் எச்சரிக்கின்றார். குப்பிளான் பிரதேசத்தின் எல்லைகளில் அமைந்துள்ள மி;ன்திரை, பூதரான்கலட்டி, தயிலங்கடவை ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ மண்ணரண்களை அண்டியும் ஞான வைரவர் கோயிலடியில் அமைந்துள்ள தனியார் காணியொன்றிலும் அதிகளவில் மிதிவெடிகள் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

மிதிவெடிகள் காணப்படும் பிரதேசங்களை அண்டி விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளை அண்டிய வீதிகள் ஊடாகவே மாணவர்களும் பாடசாலைகளுக்கும் சென்று வருகின்றனர். இவ் அச்சுறுத்தல் குறித்து சிறிலங்கா படையினருக்கு தான் அறிவித்த போதிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வந்து பார்வையிட்டு வரை படங்களைப் பெற்றுச் சென்ற போதிலும் ஆக்க பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கிராம அலுவலர் தெரிவித்தார்.

nantri - Puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home