புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, November 17, 2003

யாழ். சூரியவெளிப் பகுதியில் இடம் பெயர்ந்தோர் குடிசைகளில் கடல்நீர் புகும் அபாயநிலை

தற்பொழுது தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக சூரியவெளிப் பிரதேச அகாதிமுகாம் மக்களின் தற்கால குடிசைகளுள் கடல்நீர் உட்புகும் அபாயம் தோன்றியுள்ளது.

யாழ் நகரின் மேற்குப்புறமாக உள்ள நாவாந்துறை கரையை அண்மித்துள்ள சதுப்பு நிலத்தின் படையினரின் பாதுகாப்பு வலய நடைமுறையால் மீள்குடியமர முடியாத 200 குடும்பங்கள் சேர்ந்த 1000 பேர் தற்காலிக கடிசைகளை அமைத்து வாழ்ந்த வருகின்ற நிலையில் தற்போது தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக கடல்ப் பெருக்கு ஏற்பட்டு இச்சதுப்பு நிலம் நோக்கி நீர் செல்லத்தொடங்கியிருப்பதால் இவ் அபாயநிலை தோன்றியுள்ளது.

இதேவேளை இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுக்கு வாந்தி பேதி போன்ற அபாயகரமான தொற்று நோய் பரவும் நிலையும் தோன்றியுள்ளது.

வன்னியிலிருந்து கிருபா
17.11.2003, 19:45 ஈழம்
நன்றி: ஈழநாதம்

0 Comments:

Post a Comment

<< Home