தமிழர் புனர்வாழ்வுக்கழகம் யுனிசெவ் நிறுவனத்துடன் இணைந்து அமைத்த சிறுவர் இடைத்தங்கல் முகாம் நேற்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட இவ் இடைத்தங்கல் முகாமை காலை 11. 15 மணியளவில் சமாதான நடவடிக்கை இணைப்பாளர் டாக்டர் குணரட்ண நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறைப் துணைப்பொறுப்பாளர் சோ. தங்கன், தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் கே. பி. றெஜி, சிறிலங்கா சமாதான நடவடிக்கைகள் செயலக இணைப்பாளர் டாக்டர் குணரட்ண, யுனிசெவ் நிறுவன தெற்காசிய பிராந்திய இயக்குனர் சதிக்றாசீட், யுனிசெவ் நிறுவன இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரெட்சைபன், கிளிநொச்சி அரசாங்க அதிபர், கரைச்சிப் பிரதேச செயலர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த வயது குறைந்த சிறுவர்களை தங்க வைத்து புனர்வாழ்வு அளிப்பதற்காக அமைக்கப்பட்ட இம்முகாமில் விடுதலைப்புலிகளால் வயது குறைந்தவர்கள் என விடுவிக்கப்பட்ட 49 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

0 Comments:
Post a Comment
<< Home