புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, September 28, 2003

மீளக்குடியேற்றக் கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் தொடர்கிறது - மக்கள் அலைச்சல்
கொழும்பிலிருந்து மகிழினி - ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2003, 20:35 ஈழம்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீளக்குடியேறி வருகின்றார்கள். இவ்வாறு மீளக்குடியேறும் மக்களுக்கு மீளக்குடியேறல் கொடுப்பனவில் முதல் கட்டமாக 25,000 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.

இருந்தபோதும் இந்த இரண்டு மாவட்டங்களிலும் மீளக்குடியேறியுள்ள ஆயிரக்கணக்hன மக்களுக்கு இன்னும் மீளக்குடியேற்றத்தின் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதுடன் இக்கொடுப்பனவுகள் வழங்குவதில் மிக நீண்ட காலதாமதங்களும் தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 8,000 குடும்பங்களுக்கு மீளக்குடியேறிய கொடுப்பனவு 25,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இதில் கரைச்சி - 5306 குடும்பங்கள், கண்டாவளை - 705 குடும்பங்கள், ப10நகரி - 902 குடும்பங்கள், பச்சிப்பள்ளி - 1087 குடும்பங்கள் அடங்குகின்றன.

இதே மாவட்டத்தில் 5093 குடும்பங்களுக்கு நிவாரணம் பெற தகுதி பெற்ற பட்டியல்கள் உதவி அரச அதிபர், நிக்கொட் பிரதி திட்டப்பணிமனையில் கொடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த முதற்கட்ட கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை இந்த மீளக்குடியேற்றக் கொடுப்பனவு வழங்குவதற்கு 148. 6 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த 6880 குடும்பங்களுக்கு 25,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதில் கரைத்துறைப்பற்று - 3540 குடும்பங்கள், ஒட்டுசுட்டான் - 2243 குடும்பங்கள், புதுக்குடியிருப்பு - 940; குடும்பங்கள், துணுக்காய் - 03 குடும்பங்கள், மாந்தை கிழக்கு - 154 குடும்பங்கள் அடங்குகின்றன.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 280 குடும்பங்கள் மீளக்குடியமர்வு நிவாரணம் வழங்கத் தகுதி பெற்றிருந்தபோதும் அவர்களுக்கான மீளக்குடியேற்றக் கொடுப்பனவின் முதற்கட்ட நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுவருகின்றது இதனை நிவர்த்திசெய்ய 19. 5 மில்லியன் பணம் கிடைக்கப்பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

நன்றி: ஈழநாதம்
நன்றி - புதினம்.கொம்

0 Comments:

Post a Comment

<< Home