புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, August 10, 2003

நெடுங்கேணி அ. பு. கழகத்தால் - 72 மலசல கூடங்கள் 12 கிணறுகள் அமைப்பு
(வன்னியிலிருந்து கிருபா - ஞாயிற்றுக்கிழமை 10.8.2003, 17:40 - ஈழம்)

நெடுங்கேணி அபிவிருத்திப் புனர்வாழ்வுக் கழகம் போரூட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் நெடுங்கேணிப் பகுதியில் 72 மலசல கூடங்கள் அமைத்திருப்பதாக நெடுங்கேணி அபிவிருத்திப் புனர்வாழ்வுக் கழகத்தினர் தெரிவித்தனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்று மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த மக்களின் சுகாதார வசதிகளை கருத்திற் கொண்டு பெரியமடு, நயினாமடு, சன்னாசிப்பரந்தன் ஆகிய பகுதிகளிலேயே 72 மலசலகூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நியாப் திட்டத்துடன் இணைந்து 12 குடிநீர்க்கிணறுகளையும் இந்நிறுவனம் அமைத்துள்ளது சின்னஅடம்பன் பகுதியில் மூன்று கிணறுகளும் இராசபுரம் பகுதியில் ஒரு கிணறும் குளவிசுட்டான் பகுதியில் ஒரு கிணறும் நெடுங்கேணிப்பகுதியில் மூன்று கிணறுகளும் விஞ்ஞான குளம் பகுதியில் இரண்டு கிணறுகளையும் என மொத்தமாக 12 கிணறுகளை நெடுங்கேணி அபிவிருத்திப் புனர்வாழ்வுக்கழகம் அமைத்து மக்கள் பாவனைக்காக கையளித்துள்ளது. இதுபோன்ற மக்களுக்கான அடிப்படை வசதிகளை இந்நிறுவனம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஈழநாதம்

0 Comments:

Post a Comment

<< Home