குடாநாட்டில் 7 நலன்புரி நிலையங்களில்
212 குடும்பங்கள் அடிப்படை வசதியின்றி வாழ்க்கை
வன்னிப் பிரதேசத்தில் இருந்து யாழ்.குடாநாட்டில் மீளக்குடியமர வந்துள்ள 212 குடும்பங்கள் இருப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மாவட்டத்திலுள்ள ஏழு இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களில் பெரும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு இதுவரையும் எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை என இக்குடும்பங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இக்குடும்பங்கள் தமக்குத் தெரிந்தவர்களின் முகாம் வீடுகளில் இணைந்து வாழ்வதால் ஏனைய குடும்பங்களும் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளையும், மருத்துவ, சுகாதாரப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
இந்த வகையில் தெல்லிப்பளை பிரதேசத்திலுள்ள கோணல்புலம், நலன்புரி முகாமில் 50 குடும்பங்களும், ஊரணி மற்றும் நீதிவான் முகாம்களில் 20 குடும்பங்களும், கோப்பாய் பிரதேசத்தில் கிருஷ்ணன் கோவில் பகுதியிலுள்ள முகாமில் 12 குடும்பங்களும், உடுவில் பிரதேசத்திலுள்ள சபாபதிப் பிள்ளை முகாம் மற்றும் மட்டக்கச்சி முகாம்களில் 49 குடும்பங்களும், சங்கானை காட்டுப்புலம் முகாம், கம்பனை முகாம் மற்றும் நீதிவான் முகாம் ஆகியவற்றில் 30 குடும்பங்களும், சண்டிலிப்பாய் பிரதேசத்திலுள்ள சண்டிலிப்பாய் வடக்கு முகாம், அட்டகிரி முகாம், மற்றும் புலவர் முகாம் ஆகியவற்றில் 38 குடும்பங்களும், பருத்தித்துறை, இலட்சுமணன் தோட்ட முகாம் கம்பனை முகாம் சென்லூர்த்து மாதா முகாம் கற்கோவளம் முகாம், ஆகியவற்றில் 13 குடும்பங்களுமாக மொத்தம் 212 குடும்பங்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றன.

0 Comments:
Post a Comment
<< Home