புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, December 21, 2004

கந்தளாய் குளம் உடைப்பெடுக்கும் அபாயம் நீங்கியுள்ளது.

17.12.2004

திருக்கோணமலை கந்தளாய் குளத்து நீர் வெளியேற்றுவதன் காரணமாக ஏற்பட்டிருந்த பாதிப்பு நீங்கியுள்ளதாகவும். விவசாயிகள், பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் சண்முக சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களாக குளத்தின் கொள்ளளவுக்கு மேலதிகமாக வந்த நீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும இது தற்போது 6 அங்குலமாகவும் குறைககப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கந்தளாய் குளம் 114,000 கன ஏக்கர் நீரைக் கொள்ளக்கூடிய ஒரு பொரிய குளமாகும். இதற்கு தினம் தோறும் 750 கன ஏக்கர் நீர் வந்து கொண்டிருக்கின்றத. மழை அதிகமாகப் பெய்தால் இதன் அளவு அதிகரிக்கும். கடந்த திங்கட்கிழமை பெய்த மழையின் போது 15,000 கன ஏக்கர் நீர் குளத்தை வந்தடைந்தது. இதன் காரணமாக குளத்தின் 10 வான் கதவுகளும் 18 அங்குலம் உயரத்திற்கு திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது.

இதன் காரணத்தால் கந்தளாய், முள்ளிப்பொத்தாணை, தம்பலகாமம், சூரன்கல பிரதேசம் முற்றாக பாதிக்கப்பட்டது. இப்பிரதேச வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது இப்பகுதிகளில் மழை வெள்ளம் வடிந்தாலும் குளத்து நீர் வெளியேற்றுதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலமை இன்று முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இவ்வருடம் திருக்கோணமலை மாவட்டத்தில் 20 வருடங்கள் இல்லாத மழை பெய்துள்ளது. அல்லை கந்தளாய் வீதி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வீதியில் அமைந்துள்ள 6 சிறிய நீரோடைகள் பாதிப்புற்றதால் வெள்ளம் வீதியால் பாய்கின்றது. இதனால் திருக்கோணமலை மூதூருக்கான தரை வழிப்பாதை பாதிக்ப்பட்டுள்ளது. கடற்படையினரின் சிறிய படகுகள் மூலமாக மக்கள் 6 இடங்களில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

வெருகல் பிரதேசமும் அல்லை ஆறில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Quelle - Puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home