புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, September 13, 2003

ஈழத்தமிழ் அகதிகளை அத்துமீறி மீன் பிடிக்கும் இந்திய இழுவைப் படகுகள் கடலில் இறக்கி விடுகின்றனர்
வன்னியிலிருந்து கிருபா - சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2003, 19:12 ஈழம்

சிறிலங்கா இராணுவத்தின் கொடுமைகளுக்கு அஞ்சி கடந்த காலங்களில் தமிழகத்துக்குச் சென்று அகதி முகாம்களில் தங்கியிருக்கின்ற மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள போர்நிறுத்த சூழ்நிலை காரணமாக தமது சொந்த இடங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு திரும்புகின்ற மக்களை தமிழ் நாட்டில் உள்ள மீனவர்கள் இழுவைப்படகுகள் மூலம் ஒருவருக்கு 4000 ரூபாய் வீதம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நெடுந்தீவுக் கடலில் மார்பளவு நீரிலும் மன்னார்க் கடலில் மணற்திட்டுகளிலும் நடுநிசியில் இறக்கி விட்டு தப்பிவிடுகின்றனர்.

இதனால் இவர்கள் மிகவும் கஷ்ரப்பட்டு கரையை அடையும் போது கடற்படையாலும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் இச்சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

nantri-puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home