ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்கத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 1537 பேர் பராமரிப்பு போரினால் 630பேர் பாதிப்பு
(வன்னியிலிருந்து கிருபா - திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2003, 18:20 ஈழம்)
கிளிநொச்சி மாவட்ட ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்கத்தினால் 1537 ஊனமுற்ற அங்கத்தவர்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி கரைச்சிப், கண்டாவளை, பூநகரிப் பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து இனங்காணப்பட்ட மேற்படி அங்கத்தவர்களை இந்நிறுவனம் தற்போது பராமரித்து வருகின்றது. இவர்களில் யுத்தம் காரணமாக 630 பேரும், விபத்தின் விளைவாக 90 பேரும், நோய்த்தாக்கத்தின் காரணமாக 557 பேரும், பிறப்பில் 260 பேரும் ஊனமடைந்தவர்களாவர்.
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில் 699 பேரும், பூநகரிப் பிரதேசத்தில் 405 பேரும், கண்டாவளைப் பிரதேசத்தில் 433 பேரும், இவற்றுள் அடங்குகின்றனர். இவர்களுக்கான புனர் வாழ்வு நடவடிக்கையினை கிளிநொச்சி மாவட்ட ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்கம் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் மேற்கொண்டு வருகின்றது.
தற்போது மேற்படி சங்கத்தினரால் பச்சிலைப்பள்ளி, பளைப் பிரதேசத்தில் 130 ஊனமுற்றவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் நிதிப் பற்றாக்குறை காரணமாக இவர்கள் இன்னமும் சங்கத்தினால் உள்வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்தெனவும் விரைவில் அவர்களையும் சங்கம் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: ஈழநாதம்

0 Comments:
Post a Comment
<< Home