பூந்தோட்டம் நலன்புரி நிலையம் நேற்றுத் தீயில் எரிந்து நாசமானது
115 குடும்பங்கள் நிர்க்கதி நிலையில்...
வவுனியா, பூந்தோட்டம் அகதி கள் நலன்புரி நிலையத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஏற் பட்ட திடீர் தீ விபத்தில் 11 மண்டபங்கள் எரிந்து சாம்பலாகின. அங்கு வாழ்ந்த 115 குடும்பங்களின் உடை மைகளும் தீயில் எரிந்து நாசமாகின.
நலன்புரி நிலையத்தில் உள்ள மண்டபங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தனித்தனியே வழங்கப்பட்டிருந்தன .திடீரென ஏற்பட்ட தீயினால் அங்கு தங்கியிருந்தவர்கள் தமது உடைமைகளை விட்டு பாதுகாப்புத்தேடி வெளியே ஓடினர். மின் ஒழுக்கு காரணமாக ஒரு மண்டபத்தில் தீ ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. விரைவில் தீ ஏனைய மண்டபங்களுக்கும் பரவியது. உடைமைகளை இழந்து நிர்க்கதி நிலைக்குள்ளான 115 குடும்பங் களைச் சேர்ந்த 450 பேருக்கும் உட னடி உதவிகள் வழங்கப்பட்டன.
அகதிகளுக்கான ஐ.நா.தூதரகம், ஷயுனிசெவ், செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் வவுனியா செயலக அதிகாரிகளும் உடன் நிவாரணப் பணிகளில் இறங்கினர். அருகில் உள்ள வீடுகளில் அகதிகள் குடியமர்த்தப்பட்டனர். உதவிப் பொருள்களும் , நிவாரண உணவுப் பொருள்களும் அவர்களுக்கு வழங் கப்பட்டன .
தீ விபத்துக்கு மின் ஒழுக்கு காரணம் எனக் கூறப்பட்டபோதும் உண்மை நிலையை அறியப் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்தில் இரு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
Quelle - Uthayan

0 Comments:
Post a Comment
<< Home